Home » யார் அந்த நபாட்டேயன்?
உலகம்

யார் அந்த நபாட்டேயன்?

வடமேற்கு சவூதி அரேபியாவில் உள்ள அல் பேட் என்ற இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் “நபாட்டேயன்” பற்றிய பல அரிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அரேபியத் தீபகற்பத்தில் கிமு 400 மற்றும் கிபி 106 வரை நபாட்டேயன் என்ற பழங்குடியினர் வாழ்ந்து வந்துள்ளார்கள். ஜோர்டானில் உள்ள பெட்ராவில், அவர்கள் இருந்ததற்கான அத்தாட்சிகள் பல வருடங்களுக்கு முன் கிடைத்தன. அதைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் உள்ள ஹெக்ராவிலும் நபாட்டேயன் பற்றிய தகவல்கள் கண்டெடுக்கப்பட்டன. இப்போது அல் பாட் என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.

நபாட்டேயன், பாலைவனப் பழங்குடியினர். பரந்து விரிந்த பாலைவனத்திற்கு நடுவில் இயற்கையாக அமைந்த பெரிய மலைகளை இருப்பிடமாகக் கொண்டவர்கள். பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு போன்றவற்றில் அவர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளார்கள். பாலைவனத்தில் தொடர்ந்து குடிநீர் கிடைக்கும் வழிகளை அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாலைவன நாடோடிகளாக இருந்து வணிகர்களாக மாறியுள்ள நபாட்டேயன் கட்டுப்பாட்டில் இன்ஸென்ஸ் ரூட் (Incense Route) முழுவதும் இருந்துள்ளது. அதாவது அரேபியத் தீபகற்பத்தில் உள்ள ஏமன் மற்றும் ஓமானிலிருந்து மத்தியத் தரைக் கடல்வரை நடந்த வணிகங்களில் இவர்களது பங்கு முக்கியமானதாக இருந்துள்ளது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!