Home » ஏழு
சிறப்புப் பகுதி

ஏழு

தனியே தன்னந்தனியே

லேரி எலிசன் மருத்துவம் படிக்க வேண்டுமென்பது அவருடைய குடும்பத்தினரின் விருப்பமாக இருந்தது. முழு நேரமாக புரோகிராமராக வேலை செய்து சம்பாதிக்க வேண்டுமென்பது லேரியுடைய மனைவியின் விருப்பம். ஆனால் அவர்களுடைய கனவு வேறாகவும் லேரியின் கனவு வேறாகவும் இருந்தது. அவரால் இன்னொருவருடைய கனவுலகில் வாழ முடியவில்லை. அப்படியானால் சரி. என்னாலும் உன்னோடு வாழமுடியாது எனச் சொல்லிவிட்டு லேரியிடமிருந்து பிரிந்துபோனார் அவரது முதல் மனைவி. வாழ்க்கையில் குறிக்கோளே இல்லாத உன்னைப்போல ஒருவனோடு வாழ்ந்து பயனில்லை எனக் கடைசியாகச் சொல்லிவிட்டுப் போனார். இன்றைய தேதியில் இருநூற்று முப்பது பில்லியன் டாலர்கள் மதிப்போடு உலகின் இரண்டாவது பணக்காரராக இருக்கிறார் லேரி எலிசன்.

மென்பொருள் துறையில் தவிர்க்கவே முடியாத நிறுவனமாக இருக்கும் ஆரக்கிள் நிறுவனத்தில் 1977 முதல் 2014ஆம் ஆண்டு வரை முப்பத்தேழு வருடங்கள் அதன் தலைமைச் செயலதிகாரியாக இருந்தார். இப்போது தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகத் தன் வேலையை ஆரக்கிளில் தொடர்கிறார்.

1944ஆம் ஆண்டு லேரி எலிசன் பிறந்தபோது அவரது அம்மாவுக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. லேரியின் அம்மா ஃப்லோரென்சுக்கு அப்போது பத்தொன்பது வயது. தனியொரு ஆளாகச் சிரமப்பட்டாலும் லேரியை அவரே கவனித்துக்கொண்டார். எல்லாம் முதல் ஒன்பது மாதங்கள் தான். நிமோனியாவில் பாதிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட சாவின் வாசலுக்கே சென்றுவிட்ட சூழலில் லேரியை சிகாகோவில் இருந்த அவருடைய உறவினர்கள் தத்தெடுத்துக் கொண்டனர். உறவினரான லில்லியன் எலிசன் மற்றும் அவரது கணவர் லூயிசோடு நடுத்தரக் குடும்பச் சூழலில் வளர்ந்தார் லேரி. பன்னிரண்டாவது வயதுவரை தான் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டது அவருக்குத் தெரியாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!