Home » எட்டு
சிறப்புப் பகுதி

எட்டு

பெர்னார்ட் அர்னால்ட்

வெற்றிக்கு ஓய்வில்லை

ஃபேஷன் என்ற சொல்லே இப்போது ஃபேஷனாக மாறிவிட்ட உலகத்தில் வாழ்கிறோம். பள்ளி கல்லூரிகள் தொடங்கி நிறுவனங்களின் ஆண்டு விழா வரை ஃபேஷன் ஷோக்கள் இல்லாமல் நம் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வருவதில்லை. நவீன ஆடை அலங்காரத் துறையின் சர்வதேசத் தலைநகரான பாரீசில் நடக்கும் கண்காட்சிகளை விட அதிக எண்ணிக்கையில் உள்ளூர்க் கண்காட்சிகளைப் பார்க்க முடிகிறது. உலகெங்கும் பரவிவிட்ட இந்த ஃபேஷன் துறையில் சொகுசு ஆடைகளுக்கான தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் LVMH. அதனுடைய நிறுவனத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட். நூற்று எழுபது பில்லியன் டாலர்கள் மதிப்போடு ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

பெர்னார்ட் அர்னால்ட் 1971ஆம் ஆண்டு முதல் முறையாக அமெரிக்காவுக்கு வணிகரீதியிலான பயணம் மேற்கொண்டார். கென்னடி விமான நிலையத்திலிருந்து தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வாடகைக் காரில் பயணம் செய்தார். அப்போது அந்தக் கார் ஓட்டுநருடன் பேச்சுக் கொடுத்தார். அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதியாக ரிச்சர்ட் நிக்ஸன் இருந்தார். வெளிநாட்டுப் பணத்திற்கு நிகரான டாலர் மதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது அமெரிக்கா. பதிலுக்கு பிரான்ஸ் அதிபர் போம்பிடு அமெரிக்காவில் முதலீடு செய்திருக்கும் தங்கத்தை பிரான்சுக்கே திரும்பக்கொண்டு வரும் நடவடிக்கைகளை எடுத்திருந்தார். பிரான்ஸ் பற்றியும் அரசியல் சம்பந்தமாகவும் ஓட்டுநருடனான பேச்சு திசை திரும்பியது.

பிரான்ஸை தனக்குப் பிடிக்கும் எனச் சொன்ன ஓட்டுநரிடம் பிரான்ஸ் அதிபர் பெயர் தெரியுமா எனக் கேட்டார் பெர்னார்ட். “எனக்கு அதிபர் பெயர் தெரியாது ஆனால் கிறிஷ்டியன் டியோரைத் தெரியும்” என்றார் அந்த ஓட்டுநர். கிறிஷ்டியன் டியோர் என்ற பிராண்டின் பெயர் பிரான்சைத் தாண்டியும் பல நாடுகளில் பிரபலமாக இருந்தது. ஒரு நிறுவனத்தின் பெயருக்கு இருக்கும் மதிப்பை அவர் நேரடியாக உணர்ந்த தருணம் இது. இப்படி உலகம் முழுக்கத் தெரியும் பல பிராண்ட்களை உருவாக்கியவர் பெர்னார்ட் அர்னால்ட்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!