Home » மர்மங்களின் பரமபிதா
ஆளுமை

மர்மங்களின் பரமபிதா

இந்திரா சௌந்தர்ராஜன்

சேலத்தைச் சேர்ந்த அவ்விளைஞருக்கு எழுதுவதில் ஆசை இருந்தாலும் அப்போதவரை ஒரு சிறுகதைகூட எழுதியதில்லை. கலைமகள் அறிவித்திருந்த நாவல் போட்டி விளம்பரத்தைப் பார்த்தவர் தன் சுற்றுப்புறத்தில் தினம் காணும் சௌராஷ்டிர நெசவாளர்களின் வாழ்க்கையைப் பின்புலமாக வைத்து நாவலொன்றை எழுதி அனுப்பினார். அது முதல் பரிசு வென்றது. கலைமகள் காரியாலயத்திலிருந்து அவரது புகைப்படம் அனுப்பச் சொல்லிக் கடிதம் வந்தது. சௌந்தர்ராஜன் என்கிற தன் பெயருடன் தன் தாயார் இந்திராவின் பெயரைச் சேர்ந்து இந்திரா சௌந்தர்ராஜன் என்ற பெயரில் கதை அனுப்பியிருந்தார். அவரது புகைப்படத்தைக் கண்டதும், ‘பெயரை வைத்துப் பெண்ணெழுத்தாளர் என்றே எண்ணினோம். இப்படியோர் இளைஞரை நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என்று கலைமகள் அலுவலகம் வியப்பிலாழ்ந்தது.

சிறுகதைகள், கட்டுரைகள் என்று ஆரம்பிக்காமல், எடுத்த எடுப்பிலேயே நாவலில் தொடங்கிய அவர், பின்னாளில் நிறையச் சிறுகதைகள் எழுதிப் பரிசுகள் பல பெற்றார். சமூகக் கதைகள் எழுதிவந்தவர் திடீரென்று துறை மாறி ‘தேவி’ வார இதழில் ஒரு சரித்திரத் தொடர் எழுதினார். அது ஏனென்று ஒருமுறை விசாரித்ததற்கு அவர் சொன்ன பதில் விந்தையானது.

“தேவிலருந்து எனக்கு ஒரு லெட்டர் வந்திச்சு. ஒரு சரித்திரத் தொடர் எழுதணும், தலைப்பும் சினாப்சிசும் அனுப்பினீங்கன்னா அறிவிச்சுடலாம்ன்னு. அப்ப டிவிஎஸ்-ல வேலை எனக்கு. எழுதறதுக்கான நேரம் கிடைக்கறதுக்கே போராடணும். இருந்தாலும் வந்த சான்ஸ விடக்கூடாதுன்னு ஒரு கதைய ரெடி பண்ணி, ரெண்டு சாப்டர்சும் எழுதி சினாப்சிசோட அனுப்பினேன். அந்தத் தொடருக்கு நல்ல பேர். தொடர் முடிஞ்சு சில மாசம் கழிச்சு தேவி உதவியாசிரியரைச் சந்திச்சப்பத்தான் சொன்னார், எங்க ஆபீஸ் ஸ்டாஃப் இந்திரா பார்த்தசாரதிக்கு அனுப்பச் சொன்ன லெட்டரை தவறுதலா இந்திரா சௌந்தர்ராஜனாகிய உங்களுக்கு அனுப்பிட்டாங்க. நீங்க அதிவேகமா அனுப்பின சாப்டர்சும், சினாப்சிசும் ஆசிரியருக்குப் பிடிச்சதால இதையே போட்டுட்டார் அப்படின்னு. அப்டித்தான் சரித்திர நாவல்களுக்குள்ள தள்ளப்பட்டேன்.”.

பின்னாளில் பாண்டிய நாயகி, பொற்காசுத் தோட்டம், சேதுநாட்டு வேங்கை என்று சரித்திரக் களத்தையும் அவர் விட்டு வைக்கவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • இந்திரா சௌந்தரராஜன குறித்து பல செய்திகளை வெளியிட்டதன் மூலம் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தி விட்டீர்கள்.
    பாபநாசம் நடராஜன்
    தஞ்சாவூர்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!