Home » (எக்ஸ்ட்ரா) ஆர்டினரி கணேஷ்
ஆளுமை

(எக்ஸ்ட்ரா) ஆர்டினரி கணேஷ்

டெல்லி கணேஷ்

வயது முதிர்வு, உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ்(80) கடந்த ஞாயிறன்று காலமானார். “உறக்கத்திலேயே உயிர் பிரிந்தது. கஷ்டப்படவும் இல்லை கஷ்டம் கொடுக்கவும் இல்லை” என்று அவரது மருமகன் சதீஷ் நாராயணன் சொன்னார்.

“சனியன்று இரவு கூட வழக்கம்போலப் பேசிக்கொண்டிருந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தான் கடைசியா நடித்த படத்தின் டப்பிங் முடித்தேன். திங்களன்று ஒரு படப்பிடிப்பு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் இப்பொழுது எங்களிடையே இல்லை. கவலை என்று எதுவும் இல்லாத வாழ்க்கை அவருடையது. சமீபத்தில் தென்னிந்தியத் திரைப்பட நடிகர்கள் சங்கம் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்துக் கவுரவித்து இருந்தது. அதற்குக் குடும்பம் சார்பாக ஒரு கொண்டாட்டம் எடுக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அது நடக்க இயலாத ஒன்றாகப் போய்விட்டது. எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒத்துழைப்புத் தர வேண்டும்” என்று அவர் ஊடகங்களிடம் வேண்டினார்.

வல்ல நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட டெல்லி கணேஷ் குடும்பம் மிகப் பெரியது. இவருக்கு மூன்று வயதாக இருக்கும்போது மூன்றாவது குழந்தை பிறந்தவுடன் தாயார் மரணமடைந்து விட்டார். சிறிய குழந்தைகளை வளர்க்க அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். “கல்யாணம் மட்டும் அவர் பண்ணினார். ஆனால் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டது நான் தான். இரண்டாவது மனைவிக்கு எட்டுக் குழந்தைகள்” என்று ஒருமுறை சிரித்தவாறே சொன்னார் டெல்லி கணேஷ்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!