கலைந்து போகும் எகிப்தியக் கனவுகள்
இயற்கையாகச் செழித்து ஓடும் நதிகள், மலைகளில், கனிமங்கள் நிறைந்த மணல் பகுதிகளில் புரண்டு வரும் போது மலர்களின் சுகந்தங்களையும் கனிமங்களையும் தன் நீரில் கொண்டு வருகின்றன. ஆற்று நீரில் இயற்கையாகவே வளங்கள் மிகுந்திருக்கும். எனவேதான் பழைய உலக நாகரிகங்கள் யாவுமே ஆற்றங்கரை ஓரங்களிலேயே (நதி) உருவாகியிருந்தன.
வேட்டைத் தொழிலும், உணவு சேகரித்தலிலும் மூழ்கியிருந்த மனிதன் படிப்படியாக ஓரிடத்தில் தங்கியிருந்து பயிர்செய்கையில் ஈடுபட்டபோதே, நாகரிகங்கள் தோன்றின. பயிர்கள் செழித்து வளர நீர்த் தேவை. அத்தகைய நீரினைப் பெற்றுக் கொள்வதற்காகத் தம்முடைய இருப்பிடங்களை ஆற்றங்கரைகளில் அமைத்துக்கொண்டார்கள். இவ்வாறு ஆற்றோரங்களில் நிலையாக இருந்து உழவுத்தொழிலில் ஈடுபடும்போது, நகரங்களும் அதனையொட்டி நாகரிகங்களும் பிறந்தன.
எகிப்திய நாகரிகம் நைல் ஆற்றையும், மெசபட்டோமிய நாகரிகம் டைக்ரீசு – யூப்ரடிசு ஆற்றையும் மையப்படுத்தியே அமைந்திருந்தன. இந்த வகையிலேயே சிந்துவெளி நாகரிகமும் சிந்து ஆற்றங்கரையோரத்தில் அமைந்திருந்தது.
கங்கையும் சிந்துவும் இந்தியாவில் செழிப்பைத் தருகின்றன. சீனாவில் மஞ்சள் நதி. அது போல நைல் நதி 11 நாட்டு மக்களை வாழவைக்கிறது!
Add Comment