கடந்த வாரம் கயானாவின் பாதுகாப்புப் படைத் தளபதி ஓமர் கான் இந்தியா வந்திருந்தார். நம் பாதுகாப்புப் படைத்தளபதி அனில் சௌகானை சந்தித்து இரு நாட்டினிடையே ராணுவம், பாதுகாப்பு என உரையாடல்களால் உறவை மேம்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார். அடுத்த சில நாள்களில் இந்தியப் பிரதமர் அங்கு செல்லும் திட்டம் இருபதால், அதன் ஓர் அங்கமாக இந்தச் சந்திப்பு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கயானாவின் மீது நமக்கு என்ன அக்கறை? ஏன் என்றால் அங்கு எண்ணெய் இருக்கிறது. அதை இரு நாடுகளும் இணைந்து ஆராய ஐந்து வருட ஒப்பந்தம் இருக்கிறது. அதுபோக அதிக அளவிலான புலம் பெயர்ந்த இந்தியர்கள் அங்கு வசிக்கின்றனர், குறிப்பாகத் தமிழர்கள். இன்றும் அங்கு தமிழ் திருவிழாக்களும், திருமணங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஒன்பதாயிரம் மைல்களைத் தாண்டி அவர்கள் அங்கு சென்று சேர்ந்தது எப்படி.
அது ஒரு மாரியம்மன் கோயில் மண்டபம். முப்பதுக்கும் மேற்பட்டோர் கூடியிருக்க ஒவ்வொரு ஞாயிறு மதியமும் அங்கு மந்திரங்கள் ஒலிக்கப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அம்மன் வழிபாடு என்றில்லை, தீபாவளி, சிவ ராத்திரி, தைப்பூசம் என அனைத்தும் உண்டு. கொண்டாட்டங்கள் முடிந்ததும் சூடான சாம்பார் இட்லி, மிளகுடன் முந்திரி சேர்த்துத் தாளித்த பொங்கல் என மணக்க மணக்க உணவு வகைகளையும் சேர்த்து.
Add Comment