Home » பணம் படைக்கும் கலை – 31
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 31

31. வாங்கலாமா, வேண்டாமா?

‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று ஒரு வரியைக் கேட்டிருப்பீர்கள். இது எவ்வளவு பொருத்தமான உவமை என்பது உண்மையில் கடன்பட்டவர்களுக்குத்தான் தெரியும். அந்தக் கடனைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த இயலாமல் தடுமாறியவர்களுக்குத்தான் தெரியும், அதனால் அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களிடமும் வெளியாட்களிடமும் அவமானப்பட்டுத் தலைகுனிந்து நின்றவர்களுக்குத்தான் தெரியும்.

இன்றைக்குக் கடன் வாங்குவது மிக எளிமையாகிவிட்டது. அது ஒரு தனிச் செயல் என்பதே தெரியாத அளவுக்குக் கடன் வாங்குதல் நவீன வாழ்க்கையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. எடுத்துக்காட்டாக:

* வங்கிகள் விதவிதமான கடன் வசதிகளை விளம்பரப்படுத்தி வாடிக்கையாளர்களைக் கூவி அழைக்கிறார்கள். ஆவணங்கள்கூடத் தேவையில்லை. விரல் ரேகையை வைத்துக் கடன் தருகிறோம் என்கிறார்கள்.

* கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கிவிட்டுக் கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) எடுத்துத் தேய்த்தால் அரை நொடியில் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் கடன் வாங்கிவிடலாம்.

* இணையத் தளங்களிலும் செல்பேசிச் செயலிகளிலும் நாம் விரும்பிய பொருள்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு, ‘பின்னர் பணம் செலுத்துகிறேன்’ என்ற பொத்தானைக் கிளிக் செய்தால் போதும். மறுநொடி அந்தப் பொருளும் அதற்கான கடனும் நமக்குச் சொந்தமாகிவிடுகின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!