126 தேவைகள்
‘எனக்கான தேவைகள் மிகவும் குறைவு’ என்று பச்சையப்பாஸ் கல்லூரி மாணவனாக பரீக்ஷாவில் சேர்ந்த புதிதில் ஞாநியிடம் எதைப்பற்றிய பேச்சுக்கிடையிலோ சொன்னான்.
‘அப்படியா சொல்றே’ என்றார் உடைந்த தொண்டையில்.
‘ஆமா. எனக்கென்ன பெரிய தேவை இருக்கு. பெரிய ஆசையே இல்லாதப்ப பெருசா தேவைனு என்ன இருக்கப்போகுது.’
‘ருசி இருந்தா தேவை தன்னால வந்துடும். நல்ல படம் பாக்கணுங்கற டேஸ்ட் இருக்கில்ல. அம்மா பண்ற சமையல் பிடிக்கலேனு ஏன் சொல்றே. ருசியா இல்லேங்கறதாலதான. இப்ப உங்கிட்ட பணம் இல்லே. அதனால எல்லாத்தையும் அடக்கிவெச்சுக்கிட்டு இருக்கே. ஸ்கிரீனிங் நடக்கற தியேட்டர்ல போய் லேட்டானாலும் பரவாயில்லேனு கெஞ்சி கிஞ்சி உள்ள போய் படம் பாத்துடறே. இப்ப நீ காலேஜ் ஸ்டூடண்ட். இப்படியே எத்தனை நாள் ஓட்டமுடியும். உன்னோட தேவைகளை நீயே பாத்துக்கவேண்டி வரும்போது சம்பாதிச்சாகணும். சம்பாதிக்க சம்பாதிக்க உன்னையறியாம தேவைகள் கூடிக்கிட்டே போகும். தேவைகள் கூடக்கூட சம்பாதிச்சிக்கிட்டே இருந்தாகணும். எவ்வளவு வந்தாலும் பத்தாது.’
Add Comment