43. காணாத காட்சி
‘கானகத்தைத் தாண்டினால் ஒரு குன்று, குன்றின் மறுபுறமாக ஆறு காதம் கடந்தால் அந்த பிராமணனின் இருப்பிடம் வந்துவிடும் என்று நீ எப்போது என்னிடம் சொன்னாய்?’ என்று அந்த சூத்திர முனியிடம் கேட்டேன்.
அவன் என்னை வினோதமாகப் பார்த்தான். ‘நான் எப்போது சொன்னேன்?’ என்று என்னையே மீண்டும் கேட்டான்.
‘அதைவிடு. நான் சொன்னது சரியா? அதை முதலில் சொல்.’
‘சரிதான். ஆனால் குன்றையும் நாம் நதியின் பாதையில்தான் கடக்கவிருக்கிறோம் என்பதால் இன்னொரு அரைக் காத தொலைவு கூடும்.’
‘நல்லது. குன்றின்மீது மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை என்று நீ சொன்னாயா?’
Add Comment