Home » சலம் – 45
சலம் நாள்தோறும்

சலம் – 45

45. சொல்லில் விளைந்தவன்

தன் மனத்துக்குள் நுழைந்து தகவலைத் தூவிச் சென்றது அதர்வனாக இருக்கலாம் என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டு சாரன் தூங்கியேவிட்டான். உறக்கம் முற்றிலும் இல்லாமல் போய், நான்தான் எதையெதையோ எண்ணித் தடுமாறிக்கொண்டிருக்கிறேன். தான் சொன்னதன் அடர்த்தி என்னவென்றாவது அவனுக்குத் தெரிந்திருக்குமா என்று பார்த்தேன். இல்லை.

தன்னை நோக்கி இந்தக் கிராத குலத்து சார சஞ்சாரன் வந்துகொண்டிருக்கிறான், சூத்திர முனியின் சாபம் பலிக்கும் நாள் நெருங்குகிறது என்பதை அவன் உணர்ந்திருப்பான் என்று என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. என் தவக்காலம் சிக்கல்களின்றிக் கழிந்ததற்கு அவனொரு காரணம். அதை நானறிவேன். அதனை அவனொரு பிராயச்சித்தமாகச் செய்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இத்தனை சம்வத்சரங்களுக்குப் பிறகும் அவன் என்னை நினைத்துக்கொண்டிருப்பான் என்று தோன்றவில்லை.

என் அன்பான சாரனே, இந்த விசித்திரத்தை நீ தெரிந்துகொள். என்னால் உன் மனத்துக்குள் ஊடுருவி உன் எண்ணங்களைப் படிக்க முடிவது போல இந்தப் புவியில் யாருடைய மனத்தையும் ஊடுருவிச் செல்ல முடியும். புலன்களைப் புறந்தள்ளிச் சிந்தனையின் வெளியில் வெறும் சொற்களாகவும் அவற்றின் பொருளாகவும் புழங்க முடியும். உன் மனம், என் மனம் என்று இரண்டாக இருந்தாலும் எனக்குள் நிறைந்த பிராணனை உனது நாசியின் வழியே நீயறியாமல் என்னால் உனக்குள் கடத்தி உன் சிந்தையின் சேகரங்களைப் பிரதியெடுத்துக்கொண்டு வர முடியும். அதில் நான் சேர்க்க நினைப்பதைச் சேர்த்து மீண்டும் உன்னிடத்திலேயே கொண்டு வைத்துவிடவும் முடியும்.

ஆனால், உன்னிடம் செய்ய முடிகிற இதனை என்னால் அதர்வனிடம் செய்து பார்க்க இயலாது. ஏனெனில் அவனது மனோமய கோசத்தையே அவன் மறைத்து வைத்திருக்கிறான். அல்லது பிறக்கும்போதே அவனது மனம் அவனது தேகத்தின் புறத்தில் எங்கோ நிறுவப்பட்டுவிட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!