Home » சண்டைக் களம் – 2
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 2

தஹ்தீப்

எகிப்து

மனிதனுடன் மனிதன் மோதிக்கொள்வதில் கல்லுக்கு அடுத்து அவன் பயன்படுத்திய ஆயுதம் தடி, சிலம்பம், கோல், கம்பு. எகிப்தில் அதன் பெயர் ‘தஹ்தீப்’. எதிரியைத் தொலைவில் நிறுத்தவும், ஓங்கிச் சுழற்றித் தாக்குவதால் எந்தச் சுழற்சியின் வீச்சு தன்னைத் தாக்குமோ என்னும் அச்சத்தில் எதிரியைத் திணறடிக்கவும் பயன்பட்ட ஆயுதம் ‘தஹ்தீப்’ என்னும் சிலம்பம்.

சுழற்றி வீசப்படும் உத்திக்கு ஏற்ப நீளத்தைக்கொண்டு கி.மு. 2500 ஆண்டுகளுக்கும் (3) மேலாக எகிப்திய சண்டைக்கலையில் இது இடம்பெற்றிருக்கிறது. வீச்சு முறைகளும் தடுக்கும் முறைகளும் செதுக்கப்பட்ட மட்பாண்டங்களும் எகிப்தில் காணக்கிடைத்தன. தாக்குதல் கலையான ‘தஹ்தீப்’ பின்னாளில் நடனக்கலை என்னும் அளவில் நின்றுபோனது. பின்னர் அதைத் தூசு தட்டியெடுத்து மீண்டும் சண்டைக்கலையாக்கினர். சமகால எகிப்தில் தஹ்தீப் சண்டைக்கலையாகவும் நடனக்கலையாகவும் இருக்கிறது.

சமகால தஹ்தீப் கம்பு வீச்சின் வலம் இடம் மேல் கீழ் நடுத் தாக்குதல்கள் தமிழ்நாட்டின் சிலம்ப வீச்சுகளை ஒத்திருக்கின்றன. மோதலுக்கு முன்பாக நிற்றல், நகர்தல் நிலைகளில் ஒற்றைக்கையில் சிலம்பத்தைப் பிடித்து எதிராளியை நீக்கி நீட்டிச் சுற்றிச் சுற்றி வருவதும்கூடத் தமிழ்நாட்டின் சிலம்பாட்ட வீரர்கள் நகர்வதைப் போலவே இருக்கின்றன. சீன ஜப்பானிய சண்டைக்கலையிலும் கம்பு வீசுவது உண்டென்றாலும் அவர்களுடைய வீச்சுமுறை தமிழ்நாட்டின் வீச்சுமுறையிலிருந்து மாறுபட்டது. தமிழ்நாட்டு முறையில் சிலம்பத்தை இலகுவாகப் பிடிப்பது வழக்கம். எகிப்திய முறையிலும் அப்படியே. ஆனால், சீன ஜப்பானியக் கலைகளில் சிலம்பத்தின் மீதான உள்ளங்கைப் பிடி எந்த நிலையிலும் இறுக்கமாக வைக்கப்படுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!