பாக்கெட் உணவுப் பொருள்கள். காலையில் எழுந்தவுடன் எடுக்கும் காபிப் பொடியில் தொடங்கி, பிஸ்கட், சாக்லேட், பழச்சாறு, கெச்சப் என பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பொருள்கள் நம் அன்றாட வாழ்க்கையில் நிரந்தர இடத்தைப் பிடித்து விட்டன.
பெப்ஸிகோ, நெஸ்லே, யூனிலீவர் போன்றவை உணவு மற்றும் குளிர்பானத் துறையின் பெருநிறுவனங்கள். இவை, இந்தியா போன்ற குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில், தரம் குறைந்த உணவுப் பொருள்களை விற்பனை செய்வதாக ஓர் ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது. ஆய்வை நடத்தியது, அமெரிக்காவைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான ஏஎன்டிஐ (Access To Nutrition Initiative).
இந்த அமைப்பு பெப்ஸிகோ, யூனிலீவர் டானொன் உட்பட உலகம் முழுவதிலும் கடை விரித்திருக்கும் முப்பது பெருநிறுவனங்களை ஆய்வு செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் உருவாக்கப்பட்ட தர மதிப்பீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் புள்ளிகள் வழங்கப் பட்டிருக்கின்றன. ஐந்து என்பது உச்சத் தரப் புள்ளி. ஆரோக்கியமான உணவு என்றால் மூன்றரை புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.
Add Comment