Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 47
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 47

47. ஆன்மிக அடித்தளம்

தில்லியிலிருக்கும் புனித ஸ்டீஃபன்’ஸ் கல்லூரி 1881ல் தொடங்கப்பட்டது. காந்தியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சி. எஃப். ஆன்ட்ரூஸ் பணியாற்றிய கல்லூரி இது.

1915ல் காந்தி தில்லிக்கு வந்தபோது, ஸ்டீஃபன்’ஸ் கல்லூரியின் அப்போதைய முதல்வர் சுசீல் குமார் ருத்ரா அவரை அங்கு பேச அழைத்தார். ‘பேசுகிறேன். ஆனால், நான் எந்த மொழியில் பேசுவது?’ என்று கேட்டார் காந்தி, ‘நான் இந்தியில் பேசினால் உங்களுடைய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புரியுமா?’

‘நீங்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்தியில் பேசலாம்’ என்றார் சுசீல் குமார், ‘இங்கு பணியாற்றும் ஐரோப்பியர்களுக்குக்கூட இந்தி தெரியும்.’

இதைக் கேட்ட காந்திக்கு மிகவும் மகிழ்ச்சி, தன்னுடைய ‘சுதேசி’க் கொள்கையின்படி ஆசிரியர்கள், மாணவர்களிடம் இந்தியிலேயே உரையாற்றினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!