Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 53
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 53

53. நற்சான்றிதழ்

காந்தி முன்னின்று நடத்திய தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகத்துக்கு இந்தியாவிலிருந்து ஆதரவு திரட்டிக்கொடுத்த தலைவர்களில் கோகலேவுக்கு இணையாக ஜி. ஏ. நடேசனைக் குறிப்பிடலாம்.

தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுடைய போராட்டத்தைப்பற்றியும் காந்தியைப்பற்றியும் சிற்றேடுகள், நூல்களை வெளியிடுவது, செல்வாக்குள்ள பெரும்புள்ளிகளிடம் இதைப்பற்றிப் பேசி நிதி திரட்டுவது என்று பலவிதங்களில் காந்திக்குத் துணை நின்றவர் நடேசன். இதற்கெனச் சென்னையில் ‘Indian South African League’ என்ற தலைமையில் குழு ஒன்றையும் அமைத்துப் பலவிதமான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை வழிநடத்தினார் அவர்.

ஏப்ரல் 21 அன்று, சென்னையில் இந்தக் குழுவினர் காந்திக்கு வரவேற்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகிலிருந்த (இப்போதும் இருக்கிறது) விக்டோரியா பொது அரங்கத்திற்கு அருகிலிருந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு எஸ். சுப்ரமணிய ஐயர் தலைமை வகித்துப் பேசினார், ‘எனக்கு 73 வயதாகிறது. என்னுடைய இந்த நீண்ட வாழ்க்கையில் காந்திக்கு வரவேற்பு அளிக்கும் இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவதைவிடச் சிறந்த ஒரு பேறு எனக்குக் கிடைக்கவில்லை. ஏனெனில், இந்தியாவின் மிகப் பெரிய மனிதர்களில் ஒருவரைப் பெருமைப்படுத்துவதற்கென நாம் இங்கு கூடியிருக்கிறோம். மற்ற யாரையும்விட உலகில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர் அவர். அப்படிப்பட்ட காந்தியின் வாழ்க்கையைப்பற்றி நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டும்.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!