Home » டர்பனில் உள்ளது தாலி
தமிழர் உலகம்

டர்பனில் உள்ளது தாலி

இந்தியாவிற்கான தென் ஆப்ரிக்காவின் உயர் ஆணையராக (ஹை கமிஷனராக) அனில் சுக்லால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் டெல்லிக்கான தென் ஆப்ரிக்காவின் முதல் ‘இந்திய வம்சாவளி’ உயர் ஆணையர். இது குறித்துப் பேசிய அனில், ‘தென் ஆப்பிரிக்கா என்னுடைய ஜென்ம பூமி, இந்தியா என்னுடைய கர்ம பூமி. இரண்டு அடையாளங்களுக்குமே நான் பெருமைப்படுகிறேன்’ என்றார். அனிலுக்கு மட்டுமல்ல, சுமார் ஒன்றரை மில்லியன் இந்தியர்களுக்கும், இரண்டரை லட்சம் தமிழர்களுக்கும் தென் ஆப்பிரிக்கா கர்ம பூமி.

‘ஐந்து வருடப் பணி. விருப்பப்பட்டால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். வாடகை இல்லா வீடு, உணவு வசதி செய்துகொடுக்கப்படும். வாரத்தில் ஆறு நாள் வேலை, ஒவ்வொருநாளும் ஒன்பது மணி நேரப் பணிநேரம். ஞாயிறு விடுமுறை. கப்பலில் தங்குமிடம், மருத்துவ வசதியுடன் கூட்டிச்செல்லப்படுவீர்கள். பயணம் இலவசம். துணிமணிகள், உணவு என அங்கு மிகுந்த கவனத்துடன் நடத்தப்படுவீர்கள். ஐந்து முதல் ஆறு வாரம் பயணக்காலம். உங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் குழு எப்போதும் உடனிருக்கும்.

தென் ஆப்ரிக்காவின் நடால் (natal) பகுதியில் இறங்கியதும் நீங்கள் தங்கப்போகும் இல்லங்களை அதிகாரிகள் உங்களுக்குக் கட்டித் தருவார்கள். உங்கள் மதநம்பிக்கைகளில் எந்தவித தலையிடும் இருக்காது. உங்கள் நாட்டினர் ஐயாயிரம் பேர் வரை அங்கு இருப்பார்கள். சொந்த நாடு போன்ற சூழல் நிச்சயம். கரும்புத் தோட்ட வேலைகளைப் பார்த்துவிட்டு, அங்கு இருக்கும் மிதமான சீதோஷ்ணத்தில், நல்ல குடிநீர், பழ- காய் வகைகள் என ஆரோக்கியமாக வாழலாம் வாருங்கள்.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!