Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 55
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 55

55. காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா

காந்தியின் அரசியல், சமூகப் பரிசோதனைகளைப்பற்றிக் கேள்விப்பட்ட இந்தியர்கள் பலர் தன்னார்வத்துடன் அவருடைய இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அவ்வாறு தமிழ்நாட்டில் காந்தியைச் சந்தித்த இளைஞர்களில் ஒருவர், கிருஷ்ணசாமி சர்மா.

வழக்கமாகத் தன்னுடைய நாட்குறிப்பில் நாளொன்றுக்கு ஓரிரு வரிகளைமட்டும் எழுதுகிற காந்தி அபூர்வமாகக் கிருஷ்ணசாமி சர்மாவைப்பற்றிமட்டும் ஒரு நீண்ட பத்தியே எழுதியிருக்கிறார். இந்தியா திரும்பியபிறகு நூற்றுக்கணக்கான மக்களை, தலைவர்களைச் சந்தித்த காந்தி வேறு யாரைப்பற்றியும் இத்தனை நீளமாக எழுதியிருப்பதாகத் தெரியவில்லை.

யார் இந்தக் கிருஷ்ணசாமி சர்மா? அவரிடம் காந்தியைக் கவர்ந்தது என்ன?

‘மெட்ரிகுலேஷன்வரை படித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளை அறிந்தவர். பகவத் கீதையை நன்கு படித்து அறிந்திருக்கிறார். மூன்று ஆண்டுகள் சிறைச்சாலையில் கழித்தவர். இந்து நேசன் இதழின் துணை ஆசிரியர். வாழ்நாள்முழுவதும் ஒழுக்கத்துடனும், உண்மையாகவும், வன்முறை இன்றியும், சொத்துகளைக் குவிக்காமலும், திருடாமலும் வாழ்வதாக உறுதியெடுத்துக்கொண்டிருக்கிறார். நாட்டுச் சேவைக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ள விரும்புகிறார். காஞ்சிபுரத்தில் இவருக்கு நிலமும் வீடும் உள்ளது. அதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 200 வருவாய் வருகிறது’ என்பதுதான் கிருஷ்ணசாமியைப்பற்றிக் காந்தி எழுதியிருக்கும் குறிப்பு. இதில் நிலம், வீடு, வருவாய் ஆகிய பகுதிகளைமட்டும் நீக்கிவிட்டுப் பார்த்தால், கிருஷ்ணசாமி ஒரு ‘மாதிரி இந்திய இளைஞ’ராக இருந்திருக்கிறார் என்று புரிகிறது. அதாவது, இந்திய இளைஞர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று காந்தி விரும்பினாரோ அப்படிக் கிருஷ்ணசாமி வாழ்ந்துவந்திருக்கிறார், அதே வழியில் தொடர்ந்து நடக்க விரும்பியிருக்கிறார், அதற்குக் காந்தியின் வழிகாட்டுதலை நாடி வந்திருக்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!