நிற்க அதற்குத் தக
ஹோம் ஒர்க் செய்தீர்களா? என்ன ஹோம் ஒர்க் என்போர், சென்ற அத்தியாயத்தை அணுகவும். இரண்டு வகையான ப்ராம்ப்ட்கள் உண்டென்று பார்த்திருந்தோம். ஜீரோ ஷாட். ஃப்யூ ஷாட். இதில் ஜீரோ ஷாட் ப்ராம்ப்டிங் குறித்து விரிவாகப் பார்த்தோம். இப்போது ஃப்யூ ஷாட் ப்ராம்ப்ட்டிங் பற்றித் தெரிந்து கொள்வோம்.
ப்ராம்ப்ட் கொடுக்கும் போது நமக்கு என்ன வேண்டும் என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். இது தான் பாலபாடம். சில சூழல்களில் இதற்கு ஜீரோ ஷாட் போதுமானதாக இருக்காது. அப்போது நமக்குக் கைகொடுப்பது தான் ஃப்யூ ஷாட் ப்ராம்ப்ட்டிங்.
லைட்டா கொழப்புதா…? ஒன்றுமில்லை. சிம்பிளான விசயம் தான்.
பள்ளிக் குழந்தைகளுக்கு எவ்வாறு கடினமான விசயங்களைச் சொல்லிக்கொடுக்கிறார்கள்? அதற்கென்று சில உத்திகள் உள்ளன. உதாரணமாக கணிதப் பாடத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பயன்படுத்தப்படும் ஓர் உத்தி “எடுத்துக்காட்டு”.
Add Comment