Home » அதானியும் அமெரிக்க பிடிவாரண்ட்டும்
இந்தியா

அதானியும் அமெரிக்க பிடிவாரண்ட்டும்

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முதலீடுகளை ஈர்த்ததாக அதானிக்கு எதிராக அமெரிக்காவில் நவம்பர் 20ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. ஆந்திரா, ஒடிஷா, தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மிர், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களைப் பெற சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்து மோசடி செய்ததாக அதானி மற்றும் அவருடைய உறவினர்கள் உள்ளிட்ட எட்டு பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆந்திர அதிகாரிகளுக்கு மட்டும் 1750 கோடி லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி லஞ்சம் கொடுத்துப் பெறப்பட்ட ஒப்பந்தங்களால் அடுத்த இருபதாண்டுகளில் இரண்டு பில்லியன் டாலர்கள் அதானி நிறுவனத்துக்கு லாபமாகக் கிடைக்கும்.

லஞ்ச விவரங்களை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றி கடன் பத்திரங்களின் மூலமாக மூன்று பில்லியன் டாலர்களைப் பெற்றிருக்கிறது அதானி நிறுவனம் என்பது தான் இந்தப் புகாரின் மையப்புள்ளி. இந்த விவரங்களை அமெரிக்காவின் நியூயார்க் அரசு வழக்கறிஞர் பிரையன் பீஸ் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஐம்பத்து நான்கு பக்கக் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்கப் பங்கு பரிவர்த்தனை ஆணையமும் இதே குற்றச்சாட்டை முன்வைத்து வழக்குப்பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து அதானிக்கு எதிராக பிடிவாராண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது நியூயார்க் நீதிமன்றம். அமெரிக்காவில் இத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட முதல் இந்தியத் தொழிலதிபர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் அதானி. இந்தக் குற்றச்சாட்டுகளின் காரணமாக அமெரிக்காவில் கடன் பத்திரங்கள் மூலம் 600 கோடி டாலர் நிதி திரட்டும் முடிவைக் கைவிட்டது அதானி கிரீன் நிறுவனம்.

லஞ்சம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மாநிலங்களில் தமிழ்நாடும் இருக்கிறது. இது குறித்து விரிவான விசாரணையை நடத்த வேண்டுமெனக் கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கின்றன. அதானி குழுமத்துடன் எங்களுக்கு எந்த ஒட்டுமில்லை உறவுமில்லை எனத் தெரிவித்திருக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. ஒருபுறம் மின்சாரப் பயன்பாட்டிற்கான கட்டணம் அதிகமாக இருக்கிறது. மறுபுறம் மின்சார வாரியம், ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய்க் கடனில் இருப்பதாகச் சொல்கிறது. அப்படியானால் தனியாரிடமிருந்து அதிக விலைக்குக் கொள்முதல் செய்யப்படுகிறதா என்பதை அறிய வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!