Home » நைல் நதி அநாகரிகம் – 4
தொடரும் நைல் நதி அநாகரிகம்

நைல் நதி அநாகரிகம் – 4

ஊர் கூடிக் கட்டிய அணை

நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகளில் மாநிலங்களே முரண்படுகிறபோது நாடுகள் எப்படி ஒற்றுமையாகச் செயல்படும்?

ஒரு பக்கம் எகிப்து வளர்ச்சி அடைந்தாலும் சூடானும் எத்தியோப்பியாவும் ஏன் இன்னும் வறுமையில் வாடுகின்றன? எத்தியோப்பியாவில் 3% மக்களுக்கு மேல் பலருக்கு இன்னும் மின்சார வசதியே இல்லை. எத்தியோப்பிய மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கிறார்கள். மின்சார வசதி இல்லை எனில் எப்படி விவசாயம் செய்ய இயலும்?

எத்தியோப்பியாவில் பாதிக்கு மேல் நல்ல குடிநீர் கூட கிடைக்காமல் மக்கள் அல்லலுறுகிறார்கள். மழை பொய்த்து பஞ்சம் வந்து பசியால் மக்கள் வாடியிருக்கிறார்கள். 45 சதவீத மக்களுக்கு நல்ல கழிவுநீர் வசதிகளே இல்லை. குளிக்கக் கூட வசதியின்றி தண்ணீர் எடுக்கும் வேலை பார்ப்பதற்காகவே பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. 75% மேலான பிள்ளைகள், முதன்மை வகுப்புகளுக்குப் பின் பள்ளிகளுக்குச் செல்வதை நிறுத்தி தண்ணீர் தேடி அலைகிறார்கள்.

வறண்டு போன குளங்களும் ஏரிகளும் சுருங்கி மிருகங்கள் மனிதர்களின் கழிவுகளோடு காய்ந்து கிடக்கின்றன.

எகிப்து வளர்ச்சியுற்று இருக்க எத்தியோப்பியா மட்டும் ஏன் இப்படி?

1929இல் நைல் நதியின் நீருக்கான பிரச்சினை வந்த போது எகிப்தும் அப்போது பிரிட்டனும் சேர்ந்து நதிநீர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. சூடான் அப்போது பிரிட்டனின் காலணி. ஆகவே சூடானுக்கு 22% நீரும் 66% சதவிகித நீர்ப் பயன்பாடு எகிப்துக்கென்று ஓர் ஒப்பந்தம். எத்தியோப்பியாவை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னொரு நாளில் 1959இல் இதே ஒப்பந்தம் மீண்டும் சர்ச்சைகளுக்கிடையே புதுப்பிக்கப்பட்டபோதும் அப்படியேதான் கையொப்பமானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!