இந்த ஆண்டு டிசம்பர் மாதமே சென்னை புத்தகக் காட்சி தொடங்குகிறது. வழக்கமாக பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி மாதத்தில்தான் நடைபெறும். 1977-ஆம் ஆண்டு முதல் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடக் கண்காட்சி டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்கிப் பொங்கலுக்கு முன்னதாகவே முடியவிருக்கிறது.
கிராமங்களில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாக்கள் போல தனிச் சிறப்பு கொண்டது சென்னைப் புத்தகக் கண்காட்சி. பெருமளவில் மக்களைத் தன்பக்கம் ஈர்ப்பது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பகத்தார் தங்கள் புத்தகங்களைத் தனித் தனி ஸ்டால்களில் காட்சிப்படுத்துவர். ஆன்மிகம், அறிவியல், அரசியல், காதல், வரலாறு, தத்துவம், சிறுவர் நூல்கள் என எல்லா வகையான புத்தகங்களும் ஒரே குடையின் கீழ் கிடைக்கும். கண்காட்சியில் புத்தக வெளியீடு, எழுத்தாளருடன் சந்திப்பு, சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
ஒவ்வொரு வருடமும் இது சரியில்லை அது சரியில்லை என்ற புகார்களுக்கும் குறைவிருக்காது. இந்தப் புத்தகக் கண்காட்சியை நடத்தும், தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் (பபாசி) உறுப்பினராகவும் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி ஆலோசனைக் குழுவின் அங்கத்தினராகவும் இருக்கும் மனுஷ்யபுத்திரனிடம் பேசினோம். எழுத்தாளராக, வாசகராக, பதிப்பாளராக, ஆலோசகராகத் தன்னுடைய பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
Add Comment