Home » ஆபீஸ் 129
இலக்கியம் நாவல்

ஆபீஸ் 129

129 தாயும் அன்னையும்

ஓவியர் அச்சுதன் கூடலூர் முதல் பிரபஞ்சன் முருகேச பாண்டியன் வரை தங்கியிருந்த, கலை இலக்கியத்துக்கு ஆகிவந்த மேன்ஷன் என்று சொல்லி, இவன்தான் சுகுமாரனை ஜானிஜான் கான் தெருவில் கொண்டுபோய் தங்க வைத்தான்.

அன்று எதோ ஒரு பண்டிகை. அதைப் பற்றி இவனுக்குப் பெரிதாக ஒன்றுமில்லை – ஒருநாள் ஆபீஸ் போகவேண்டாம் என்பதைத் தாண்டி. அது எதோ தேசிய விடுமுறை தினமாக இருந்ததால் வீட்டில் கொட்டிக்கொண்டு ஊர்சுற்றக் கிளம்பிவிட்டான். கிளம்பியவனின் சைக்கிள், நம்பிராஜன் நிஜமாகவே விக்ரமாதித்யனாக நாடாறு மாதமாய் ஊர் பார்க்கப் போயிருந்ததால் கேகே நகரிலிருந்து வழியிலெங்கும் நிற்காமல் சுகுமாரன் இருந்த மீர்சாகிப் பேட்டை மேன்ஷனுக்குப் போய்ச் சேர்ந்தது.

அவனும் மதியச் சாப்பாட்டை முடித்துவிட்டு சும்மா படுத்திருந்தான். கொஞ்ச நேரம் அறையிலமர்ந்து 4க்கு 1 என்கிற விகிதத்தில் சிகரெட் பிடித்தபடி இலக்கியத்தை அவனும் வம்பை இவனுமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

விடுமுறை, ரெண்டுங்கெட்டானாய் வாரத்தின் நடுவில் வந்து தொலைந்திருந்ததால் மொட்டைப் பசங்கள் ஊருக்குப் போகமுடியாமல் சீட்டாடிக்கொண்டு மேன்ஷனையே களேபரப்படுத்திக்கொண்டு இருந்தார்கள். இந்த வயதில் சைட்டடிக்காமல் எப்படிச் சீட்டாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று வியப்பாக இருந்தது. மொட்டை வெயிலில் சைட்டடிக்க வசதியாக எவள் வந்து வாசலில் நிற்பாள் என்றும் தோன்றிற்று. அம்மை வார்த்த மூஞ்சுடைய பாண்டிச்சேரி முத்தியால்பேட்டை சைக்கிள்கடைக்காரன், கசகசவென்றிருக்கிற இந்த நேரத்தில்தானே அடுத்திருந்த விட்டுக்குள் நுழைவான் என்றும் தோன்றியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!