66. செயலில் காட்டுங்கள்!
நெல்லூரில் நடைபெற்ற மெட்ராஸ் மாகாண அரசியல் மாநாட்டில் பேசிய பல தலைவர்கள், ‘நாம் உள்ளூர்த் தொழில்களை ஆதரிக்கவேண்டும், ஊக்குவிக்கவேண்டும்’ என்றார்கள். மக்களும் அதைக் கைதட்டி வரவேற்றார்கள்.
ஆனால், இந்த உயர்ந்த எண்ணங்களெல்லாம் மேடையில்மட்டும்தான் அரங்கேறின. கள நிலவரம் இதற்கு நேரெதிராக இருந்தது.
இதைப் புரிந்துகொள்வதற்கு காந்தி நெடுந்தொலைவு செல்லவேண்டியிருக்கவில்லை. அதே மாநாட்டில், தலைவர்கள் உள்ளூர்த் தொழில்களைப் பாராட்டிப் புகழ்கின்ற அரங்கங்களுக்கு மிக அருகில், உள்ளூர்த் தொழிலாளர்களால் நெய்யப்பட்ட துணிகளைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்கிற சில கடைகளும் இடம்பெற்றிருந்தன. காந்தி அந்தக் கடைகளைப் பார்வையிட்டார், அவற்றை நடத்துகிறவர்கள் சிலருடன் பேசினார்.
‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?’
‘சித்தூர் மாவட்டத்திலிருக்கிற நாராயணவனத்திலிருந்து வருகிறோம். இவையெல்லாம் நாங்களே நெய்த துணிகள்.’
Add Comment