Home » சலம் – 68
சலம் நாள்தோறும்

சலம் – 68

68. அந்நியன்

யாரென்று யாரும் அறியாத யாரோ ஒருவனின் வருகையில் எல்லாம் தொடங்கியது.

வித்ருவின் புரத்துக்கு அப்பால் தென் மேற்கே உள்ள சமவெளியில் சிகாரிகளின் குடியிருப்பு ஒன்று உண்டு. எண்பது குடும்பங்கள் அங்கே வசித்தன. வேட்டையாடுதலைத் தொழிலென்று சொல்லிக்கொண்டாலும் வழிப்பறியும் கொலை, கொள்ளையும் அவர்தம் வாழ்க்கை முறையாக இருந்தது. அச்சிகாரிகளுள் யார் ஒருவரையாவது கோட்டைக்குள் மக்கள் கண்டுவிட்டால் உடனே ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக்கொண்டு, ஒருவரையொருவர் எச்சரித்துக்கொண்டு, அவரவர் சம்பத்துகளை பத்திரப்படுத்திக்கொண்டு, ஆவினங்களைத் தலையெண்ணிக் கட்டிப் போட்டுத் தம்மால் இயன்ற பாதுகாப்பினைச் செய்துகொள்வது வழக்கம். கொலைக்கு அஞ்சாத பாதக வாழ்வினை விரும்பி ஏற்று வாழ்ந்து வந்த அவர்களது இடத்துக்குத்தான் அவன் வந்து சேர்ந்தான்.

அந்நியன் ஒருவன் சிகாரிப் பிரவாசத்துக்கு உள்ளே வந்திருப்பதை நேரில் கண்டவர்களும் அவன் எங்கே தங்கியிருக்கிறான் என்பது தெரியவில்லை என்று சொன்னார்கள். ஆனால் பல இடங்களில் சஞ்சரிக்கிறான். சில சிகாரிகளின் கூடாரங்களைத் தேர்ந்தெடுத்து அதன் வாயிலில் சென்று நின்று உற்றுப் பார்க்கிறான். ஒன்றும் பேசாமல், யாரையும் அழைக்காமல், எதுவும் செய்யாமல் திரும்பிச் சென்றுவிடுகிறான். இது அம்மக்களுக்கு மிகுந்த குழப்பத்தையும் பதற்றத்தையும் அளித்தது.

கண்டவர்கள் அவனிடம் ‘நீ யார்?’ என்று கேட்டபோது அவன் பதிலளிக்கவில்லை. அதட்டிக் கேட்க முனைந்தவர்களைத் தொட்டு நகர்த்திவிட்டுப் போய்விடுகிறான். கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போய்விடும் வல்லமை அவனிடம் இருக்கிறது என்று அம்மக்கள் சொன்னார்கள்.

வித்ருவின் புரத்துக்குள்ளும் அதனைச் சுற்றி அமைந்த கிராமப் பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு அந்தச் சிகாரிகளுடன் தொடர்பிருந்ததில்லை. எனக்குத் தெரிந்து அந்தக் குடியிருப்புக்கு அச்சமின்றிச் சென்று வரக்கூடிய ஒரே நபராகக் குத்சன்தான் இருந்தான். ‘களவு கொள்ள என்னிடம் ஒன்றுமில்லை. சும்மா தாக்க வருவார்களானால் தூக்கிப் போட்டு மிதித்தால் போயிற்று’ என்று சொல்லிவிட்டு எல்லா இடங்களிலும் அலைந்து திரிவதைப் போலச் சிகாரிகளின் குடியிருப்பிலும் அவன் சுற்றி வருவதை நான் அறிவேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!