Home » பிஜி: உரிமைக் குரலும் தமிழர் புரட்சியும்
தமிழர் உலகம்

பிஜி: உரிமைக் குரலும் தமிழர் புரட்சியும்

பிஜியில் தமிழர்கள்

எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிஜியில் தமிழ் வகுப்புகள் தொடங்கப்படவிருக்கின்றன. கடந்த ஆண்டு பிஜிக்குச் சென்றிருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கிருக்கும் தமிழர்களைச் சந்தித்துப் பேசினார். அவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவிலிருந்து தமிழ் ஆசிரியர்களை அங்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி, விரைவில் அங்கு தமிழ் ஆசிரியர்கள் செல்லவிருக்கிறார்கள். அங்குள்ள மக்கள் தொகையில் நாற்பது சதவிகிதத்திற்கும் மேல் இந்திய வம்சாவளியினர் தான். அதில் கால் பங்கு மக்கள் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள்.

பசிபிக் பகுதியில், ஏன் ஒட்டுமொத்தப் புவியின் தென் அரைக்கோளத்திலேயே பெரிய இந்துக் கோயிலான ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலயம் பிஜியில் தான் அமைத்துள்ளது. இந்திய சன்மார்க்க ஐக்கியச் சங்கம் சார்பில் எண்பதுகளில் கட்டப்பட்டு, தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கோயிலில் வண்ணம் பூசுவதற்கும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் சென்னை-மகாபலிபுரத்திலிருந்து தான் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். எட்டு மாதப் பணி ஒப்பந்தத்துடன் வந்து அங்கேயே தங்கி அவர்கள் பணிகளை முடித்து தரும் வகையில் ஏற்பாடுகள் சங்கத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது. சுப்பிரமணிய கோயிலில் தைப்பூசமும், மாரியம்மன் கோயில் தீமிதி விழாவும் அங்கு விசேஷம். மற்றபடி அங்கிருப்பவர்கள் தமிழை மறந்த தமிழர்கள் தான்.

பூசாரிகள், ஆசிரியர்கள், கட்டிடக் கலைஞர்கள் எனச் சங்கம் சார்ந்த கோயில், பள்ளிக்கூடப் பணிகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்து ஆள்களை இறக்குமதி செய்துகொள்கின்றனர். பேருந்து நிலையங்களின் அருகில் வடை, பஜ்ஜி கடைகள் உண்டு, முனியம்மா, மல்லிகா போன்ற பெயர்களும் வழக்கத்தில் இருக்கின்றன. அதைத் தாண்டி தமிழ் – தமிழர்கள் என அங்குத் தனியாக எதுவுமில்லை. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் நாளடைவில் இந்தியில் மட்டுமே பேசியதால், அங்கே தமிழ், தெலுங்கு, குஜராத்தி, என்றில்லாமல், இந்தி – இந்தியர்கள் என்பது மட்டுமே ஒரே அடையாளம் என்றானது. அங்கே நாட்டின் வழக்கு மொழிகளில் ஆங்கிலம் மற்றும் பிஜி மொழிகளோடு, பிஜி இந்தியும் சேர்ந்துகொண்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!