அரவிந்த் பெனாகிரியா தலைமையிலான பதினாறாவது நிதி ஆணையத்தின் கூட்டம் கடந்த மாதம் சென்னையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சரும் மாநில நிதியமைச்சரும் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். மாநில நலனுக்காக எழுப்பப்பட்ட அந்தக் கோரிக்கைகளை மத்திய அரசு செயல்படுத்துமா என்பதைப் பார்க்க நாம் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். அந்தக் கோரிக்கைகளுக்கான தேவை ஏன் எழுந்தது? அவற்றின் அவசியம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
மக்கள் செலுத்தும் பெரும்பான்மையான வரிப்பணம் மத்திய அரசுக்குச் செல்கிறது. அவற்றிலிருந்து மாநில அரசுக்குச் சேர வேண்டிய நிதியை நிர்ணயிப்பதில் சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. நிதி சார்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு இடையில் இருக்கும் சிக்கல்களை நிர்வகிக்க 1951ஆம் ஆண்டு நிதி ஆணையம் உருவாக்கப்பட்டது. பெறப்படும் நிதியை எப்படிப் பங்கிடுவது என்பதை முடிவு செய்வது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த நிதி ஆணையத்தின் பொறுப்பு.
செஸ் மற்றும் சர்சார்ஜ் எனப்படும் வரிமுறைகள் நேரடியாக மத்திய அரசுக்குச் சென்று சேரக்கூடியவை. 2014ஆம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவியேற்கும் முன் 13.5 சதவிகிதமாக இருந்த இந்த வரி இப்போது 28 சதவிகிதத்துக்கும் அதிகமானதாக இருக்கிறது. இதனால் மாநில அரசுக்கு வரவேண்டிய நிதி குறைவாக இருக்கிறது.
Add Comment