Home » சலம் – 69
சலம் நாள்தோறும்

சலம் – 69

69. கருநிழல்

எப்போதும் போல அன்றைக்குப் புலரும் நேரம் சரஸ்வதியின் கரைக்குச் சென்றேன். எனக்கு முன்னால் குத்சன் அங்கே அமர்ந்திருக்கக் கண்டேன். அது எனக்குப் புதிதாக இருந்தது. என்னிடம் எதையோ சொல்வதற்காக அவன் காத்திருக்கிறான் என்று நினைத்தேன். புலர்ந்து ஒரு நாழிகை கழிந்து நான் திரும்பலாம் என்று நினைத்து ஆசிரமத்தை நோக்கி நடக்கத் தொடங்கிய பின்பும் அவன் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழவில்லை. நான் வந்ததையோ, நின்றதையோ, சென்றதையோ பொருட்படுத்தவும் இல்லை. எப்போது காண நேர்ந்தாலும் ஒரு சொல்லாவது அவன் என்னைப் பார்த்துப் பேசாதிருந்ததில்லை. முதல் முறையாக அன்றைக்கு அவன் அப்படி இருந்தது வினோதமாக இருந்தது.

மறுநாள் சந்தி வேளையில் அவனை மீண்டும் நதிக்கரையில் கண்டேன். அப்போதும் அவன் எதுவும் பேசவில்லை. ஒருவேளை தியானம் பழகுபவனாக இருந்தால் என் இருப்பு அவனைத் தொந்தரவு செய்யக்கூடாதென்று நினைத்து அன்றும் அமைதியாகவே திரும்பிச் சென்றேன்.

மேலும் இரு தினங்கள் கழிந்த பின்பு அவனது பிதா என்னிடம் வந்தான்.

‘ரிஷியே, என் மகனுக்கு ஏதோ நேர்ந்திருக்கிறது. அவன் பேசுவதில்லை. உண்பதில்லை. உறங்குவதில்லை. எப்போதும் சர்சுதியின் கரையிலேயே கிடக்கிறான். தொட்டு அழைத்தாலும் திரும்புவதில்லை. எங்களுக்கு அச்சமாக இருக்கிறது’ என்று சொன்னான்.

‘உன் மகனுக்குத் தவறாக எதுவும் நேர்ந்துவிட வாய்ப்பில்லை. அதைக் குறித்துக் கவலைப்படாதே’ என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தேன். தாய் தகப்பன் உணராதபோதிலும், அவனே உணராவிட்டாலும்கூட அவன் ஒரு முனி. இயற்கை தனது இசைக்கான கருவிகளுள் ஒன்றாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டதைக் காரணமின்றிக் கீழே போட்டு உடைக்காது. இதை எப்படி அவனுக்குப் புரிய வைக்க முடியும்? ஒன்றும் நேராது என்கிற ஒரு சொல். அதைத்தான் தந்து அனுப்பினேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!