Home » சலம் – 72
சலம் நாள்தோறும்

சலம் – 72

72. மகாமுனி

அதற்குமுன் அவன் அப்படி இருந்து நான் கண்டதில்லை. விண்ணை நோக்கிச் செலுத்தப்படவிருந்த அக்னி அஸ்திரம் போலத் தகித்து அமர்ந்திருந்தான். எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது. விவரம் தெரியாமல் யாராவது அப்போது அவனை நெருங்கினால் பஸ்மமாவதைத் தவிர்க்கவே இயலாது போகும். அதனாலேயே அவசர அவசரமாகக் குடிலைவிட்டு வெளியேறி அவன் அமர்ந்திருந்த சரஸ்வதியின் படித்துறைக்கு விரைந்தேன்.

பொதுவாகப் படித்துறைக்கு ஆண்கள் செல்வதில்லை. வித்ருவின் பெண்கள் மட்டுமே அங்கே நீராடச் செல்வார்கள். குத்சன் தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் அந்தப் பக்கம் சென்றிருப்பானா என்பது சந்தேகமே. எதனால் அவன் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தான் என்று எனக்கு விளங்கவில்லை. விடிவதற்கு மூன்று நாழிகைப் பொழுது இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் பெண்கள் அவ்விடத்துக்கு வரத் தொடங்கிவிடுவார்கள். ஒன்று, அதற்குள் அவன் அங்கே சென்ற காரியம் நிறைவேறி அவன் எழுந்து செல்ல வேண்டும். அல்லது அவனது பணி சிதறாதிருக்க எதையாவது செய்ய வேண்டும்.

வழக்கத்தினும் வேகமாக நடந்து அப்படித்துறையை நெருங்கினேன். நான் அப்போது அவனை எந்தக் கோலத்தில் கண்டேன் என்று என்னால் விவரிக்க இயலாது. வித்ருவின் எந்த சராசரி ஆணாயினும் பெண்ணாயினும் அவன் அமர்ந்திருந்த விதத்தையும் அவனைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருந்ததையும் கண்டிருந்தால் மிக நிச்சயமாக அதிர்ச்சியிலேயே இறந்திருப்பார்கள். பிருத்வியில் வசிக்கும் யாராலும் கண்டறிய இயலாத மிகச் சில ரகசியங்களுள் ஒன்றாக அவனது வாழ்க்கை வரையறுக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்தேன். அதிர்ச்சியடையவோ மகிழ்ச்சி கொள்ளவோ வியக்கவோ திகைக்கவோ இதில் ஒன்றுமில்லை. அவன் எங்கும் நிறைந்ததன் ஏதோ ஒரு கண்ணி. அவனுக்கும் அதைத் தெரியப்படுத்தாத சூட்சுமக் கருவின் மையத்தை என்னால் மட்டும் உற்று நோக்கிவிட முடியுமா என்ன? நான் அதர்வன். அதன் இன்னொரு கண்ணி. அவ்வளவுதான்.

என்னால் அப்போது அவன் மனத்தை ஊடுருவ முடிந்தது. அதில் எனக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அவன் மிகத் தீவிரமாக அந்த அபிசாரகனின் சிந்தைக்குள் நுழைந்து அதனைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிடும் முயற்சியில் இருந்தான். அது முடியாதபட்சத்தில் ஆதியோடந்தமாக அவனது சரித்திரம் அனைத்தையும் படித்துவிட முடிவு செய்திருந்தான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!