Home » சலம் – 73
சலம் நாள்தோறும்

சலம் – 73

73. முந்நூறு கோமேதகங்கள்

வித்ருவில் அவரை அறியாதவர்கள் யாருமில்லை. சத்திரியர்களின் குலபதியென மதிக்கப்பட்ட அவர் பெயர் மன்வந்த்ரன். ராஜனின் மந்திராலோசனைக் குழுவில் ஒருவராக நெடுங்காலமாகக் கடமையாற்றிக்கொண்டிருந்தவர். வித்ருவின் புரத்துக்கு உள்ளே ராஜனின் மாளிகை இருந்த வீதிக்கு நான்கு வீதிகள் தள்ளி அவரது மாளிகை இருந்தது. புரத்தின் வெளியே கிராமாந்திரத்தில் ஏராளமான காணிகள் அவருக்குண்டு. ராஜனே உத்தரவிட்டு, சரஸ்வதியிலிருந்து அவரது காணிக்கு நீர் பாயும் விதமாக ஒரு கால்வாய் அமைக்கப்பட்டதை ஊரே பல காலம் பேசி வியந்திருக்கிறது. அறுபது தாஸ்யர்களும் நூற்றுக் கணக்கில் பசுக்களும் பதினெட்டு கஜங்களும் ஐம்பது புரவிகளும் பணிகளிடம் சொல்லி வைத்து, மேற்குத் திசைப் புந்திலர்களிடமிருந்து வாங்கி வரப்பட்ட முந்நூறு கோமேதகங்களும் அவரது செழிப்புக்கு சாட்சியாகப் புரமெங்கும் எப்போதும் பேசப்படும். தர்ம பத்தினியுடனும் இரு புதல்வர்கள் மற்றும் ஒரு புத்ரியுடனும் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ்ந்துகொண்டிருந்தவருக்குத் திடீரெனக் குஷ்டம் பீடித்தது. இனி சபைக்கு வர வேண்டாம், அன்றாடம் வைத்தியம் பார்த்து சொஸ்தம் செய்துகொள்ளட்டும் என்று ராஜன் உத்தரவு அனுப்பினான்.

எதிர்வந்த இரண்டாவது வளர்பிறை மூன்றாம் முகூர்த்தத்தில் அவரது புத்திரிக்கு விவாகம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மன்வந்த்ரன் குஷ்டத்துக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்ட வடு வீட்டார், அதனையொரு துர்சகுனமாகக் கருதி, அச்சம்பந்தத்தில் விருப்பமில்லை என்று ஆளனுப்பித் தகவல் சொல்லிவிட்டார்கள். மன்வந்த்ரன் மனமுடைந்து போனார்.

வித்ருவில் ராஜ வைத்தியருக்கு அவ்வளவு திறமை போதாது என்றொரு பேச்சுண்டு. எனவே, மன்வந்த்ரனின் புதல்வர்கள் இருவரும் விதேயத்திலிருந்து யாராவதொரு ராஜ வைத்தியரைத் தருவிக்க என்ன வழி என்று ஆலோசித்தார்கள். முஞ்சவத்தில் ஒரு மகா வைத்தியர் உள்ளார் என்றும், ஆனால் அவரை வித்ருவுக்கு அழைத்து வருவது இயலாத காரியம்; மன்வந்த்ரனை அவரது இருப்பிடத்துக்குக் கொண்டு செல்ல இயலுமானால் மூன்று மண்டல காலத்துக்குள் அவருக்கு வந்திருக்கும் பிணியை முற்றிலுமாகக் குணப்படுத்திவிட முடியுமென்றும் யாரோ சொன்னார்களென்று புதல்வர்களுள் ஒருவன் முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு வருவதற்காகப் புரவியேறி முஞ்சரத்துக்குப் புறப்பட்டுச் சென்றான். ஆனால் போய்ச் சேரும் முன்பே அவன் விஷக் காய்ச்சல் கண்டு இறந்து போனான்.

இத்தகவல் வந்து சேர்ந்தபோது மன்வந்த்ரன் மனமுடைந்து போனார். துயரத்தைக் கடக்க வழி தெரியாமல் நாளும் பொழுதும் சோமம் அருந்தி மயங்கியிருக்கத் தொடங்கினார். இது உருவாக்கிய பேச்சு அவரது நோயினும் வேகமாகப் பரவியது. அவரது ராஜாங்கப் பணிக்கு ஒரு முடிவு வந்தது. ஔஷதிகளுக்கும் குடும்பப் பரிபாலனத்துக்கும் ஏராளமான நிலபுலன்களை இழக்க வேண்டியதானது. புரவிகளை மொத்தமாக ராஜனின் லாயத்துக்குத் தந்துவிடும்படி நேர்ந்தது. அனைத்துக்கும் உச்சமாக வீட்டில் நிம்மதியில்லாமல் போனது. எப்போதும் சண்டை சச்சரவுகள், என்றென்றும் கண்ணீர் என்றானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!