vi. இந்தியா
இந்தியாவின் பழமையான சண்டைக்கலை மற்போர். தமிழகத்திலும் ஆயுதமில்லா சண்டைக்கலைகளுள் பழமையானது மற்போர்.
ஆமூர் மல்லனை சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி என்னும் அரசன் வீழ்த்தியதைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலில் மற்போர்க் காட்சி உள்ளது. ஒரு காலை மார்பின் மீது வைத்து அழுத்தியும் இன்னொரு காலை வரப்போகும் எதிர்த் தாக்குதலைத் தடுக்க ஆயத்த நிலையிலும் வைத்திருந்ததாகப் பாடல்.
இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி,
ஒருகால் மார்பொதுங்கின்றே;
ஒருகால் வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே;
புறநானூறு
பாடல்: 80
Add Comment