36. அட்டை மேல் அட்டை
சில மாதங்களுக்கு முன்னால், CC Geeks என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டு (கடன் அட்டை) விரும்பிகளைப்பற்றிய கட்டுரையொன்றைப் படித்தேன். அதில் ஒருவர் தன்னிடம் 51 கடன் அட்டைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
எதற்காக இத்தனை கடன் அட்டைகள்? ஒன்றோ, இரண்டோ போதாதா?
‘என்னுடைய தேவைகளுக்கேற்ப நான் கடன் அட்டைகளைத் தேர்ந்தெடுத்து வாங்குகிறேன்’ என்கிறார் அவர், ‘ஒவ்வொரு பொருளையும் வாங்குவதற்கு முன்னால் அதற்கு ஏற்ற கடன் அட்டை எது என்று சிந்தித்துப் பயன்படுத்துவேன். அதனால் எனக்கு இவ்வளவு கடன் அட்டைகள் தேவைப்படுகின்றன.’
என்னதான் மாறுபட்ட தேவைகள் இருந்தாலும் ஐம்பது கடன் அட்டைகள் என்பது கொஞ்சம் ‘டூ மச்’தான். ஆனால், இன்றைக்கு நம்மைச் சுற்றியிருக்கிற பலர் குறைந்தது நான்கைந்து கடன் அட்டைகளை வைத்திருக்கிறார்கள். அவற்றை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதன்மூலம் பணத்தை மிச்சப்படுத்துகிறார்கள், சேமிக்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள்.
Add Comment