Home » எனதன்பே எருமை மாடே – 6
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே எருமை மாடே – 6

6. அன்புச் சுரண்டல்கள்

மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய நாவல்களில் ஒன்று பாத்துமாவின் ஆடு. இந்நாவலின் நாயகனிடம் அவரது குடும்பத்தினர் எப்போதும் ஏதோ ஒரு காரணம் சொல்லிப் பணம் கேட்பார்கள். இந்நாவல் எழுதப்பட்ட காலம் பல வருடங்களுக்கு முன்னதாக இருந்த போதிலும் உறவுகள் அன்பின் பெயரால் ஒருவரைச் சுரண்டுவது என்பது இன்றும் நடைபெறுகின்ற ஒரு செயலாகும். இப்படியான சுரண்டல்கள் அதிகமாக உறவினர்களே செய்தாலும் நட்பு வட்டத்தில் உள்ளவர்களும் செய்வதுண்டு. பணம் மட்டுமே அல்லாது உதவிகள் எனும் பெயரிலும் தங்கள் தேவைக்காக மற்றவர்களைப் பயன்படுத்துவோர் பலர் உண்டு. அதுவும் ஒரு வகைச் சுரண்டலே.

மற்றவர்களுக்கு நாமாக விரும்பி உதவி செய்வதோ அல்லது உண்மையான ஒரு தேவையில் உள்ள ஒருவருக்கு உதவி செய்வதையோ சுரண்டல் என்று சொல்லவில்லை. மனிதர்களாகிய நாம் எப்போதும் மற்றவர்களுக்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும். சுரண்டல் என இங்கு குறிப்பிடுவது ஒருவரது நல்ல குணத்தைப் பயன்படுத்தி அநியாயமாக அவர் மூலம் மற்றவர்கள் பயன் பெறுதல். உதவி செய்பவருக்கு விருப்பம் இருக்காது ஆனாலும் அவரால் மறுக்கவும் முடியாது. முக்கியமாக நெருங்கிய உறவினரோ அல்லது நண்பரோ தங்கள் சோகக் கதையினைச் சொல்லிக் கேட்கும் போது மறுப்பது மிகவும் கடினமாகும்.

மறுக்காமல் விருப்பமின்றி உதவுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது நமக்கு வேண்டியவர் ஒருவர் கஷ்டத்தில் இருப்பதை நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. சில வேளைகளில் மற்றவர் சொல்வதில் உண்மை இல்லை என்று உணர்கின்ற போதும் அவர்களது சோகக் கதையை நாம் நம்புவோம். இது உணர்வுப் பூர்வமான அன்பு மிரட்டல். இரண்டாவது காரணம் நமது சமுதாயக் கட்டமைப்பு. வீட்டில் மூத்தவன் கட்டாயம் இளையவருக்கு உதவி செய்ய வேண்டியது கடமை போன்றவை இவ்வகையில் அடங்கும். கடமை உணர்வு சிறு வயதிலிருந்தே ஊட்டி வளர்க்கப் பட்டால் அதை மீறுவது கடினமாக இருக்கும். அக்கடமை உணர்வை மற்றவர்கள் தமக்குச் சாதகமாக எடுத்துக் கொள்வார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!