Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 85
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 85

85. தூதாபாய் வருகை

காந்தி சத்தியாக்கிரக ஆசிரமத்தைத் தொடங்குவதற்குமுன்னால் அகமதாபாத் நண்பர்களுடன் (அதாவது, ஆசிரமத்துக்குப் பொருளுதவி செய்ய முன்வந்தவர்களுடன்) பல தலைப்புகளைப்பற்றிப் பேசினார். அவற்றில் ஒன்று, இந்த ஆசிரமத்தில் தீண்டாமை பின்பற்றப்படாது.

அதாவது, தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒருவரை மற்றவர்கள் தீண்டத்தகாதவராக நினைக்கலாம். ஆனால், அவர் இந்த ஆசிரமத்தின் கொள்கைகளைப் பின்பற்ற ஒப்புக்கொண்டால், அவர் முழு மனத்துடன் இங்கு சேர்த்துக்கொள்ளப்படுவார். இங்குள்ள மற்றவர்கள் அவரைத் தீண்டத்தகாதவராக எண்ணமாட்டார்கள், ஒதுக்கமாட்டார்கள், அவரோடு ஒரே கூரையின்கீழ் வாழவோ, சமைத்துச் சாப்பிடவோ தயங்கமாட்டார்கள்.

காந்தி முழுத் தீவிரத்துடன்தான் இதைச் சொன்னார், ஆசிரம நெறிமுறைகள் ஆவணத்திலும் இதைப்பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டார். ஆனால், அவருடைய அகமதாபாத் நண்பர்கள் இதை நம்பவில்லை, ‘இதெல்லாம் எல்லாரும் சும்மா பேச்சுக்குச் சொல்வதுதான். உண்மையில் யாரும் அப்படிச் செய்யமாட்டார்கள்’ என்று எண்ணிவிட்டார்கள்.

‘நீங்கள் போடுகின்ற கடுமையான கட்டுப்பாடுகளையெல்லாம் பின்பற்றக்கூடிய தீண்டத்தகாதவர் ஒருவர் எங்கிருந்து கிடைப்பார்?’ என்று ஒரு வைணவ நண்பர் கேட்டார். அதாவது, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களால் இதுபோன்ற கட்டுப்பாடுகளையெல்லாம் பின்பற்ற இயலாது என்று அவர் நினைத்தார். மற்றவர்களும் அப்படித்தான் நினைத்தார்கள். அதனால், இந்த விஷயத்தை முன்வைத்து அவர்கள் ஆசிரம முயற்சிக்கு முட்டுக்கட்டை போடவில்லை.

ஆக, காந்தியின் மனத்தில் தீண்டாமை எண்ணம் இல்லை, அதை ஒழிக்கவேண்டும் என்ற உறுதியான சிந்தனைதான் இருந்தது. ஆனால், அவருடைய ஆசிரமத்துக்கு உதவியவர்கள் தீண்டாமையைத் தவறாக எண்ணவில்லை, தாழ்த்தப்பட்ட மனிதர் ஒருவர் காந்தியின் ஆசிரமத்தில் சேர்க்கப்படுவார் என்றோ, எல்லாச் சாதிகளைச் சேர்ந்த அனைவரும் அங்கு ஒன்றாக வாழ்வார்கள் என்றோ அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!