Home » சலம் – 86
சலம் நாள்தோறும்

சலம் – 86

86. கூர்

அவர்கள் கொந்தளித்துக்கொண்டிருந்தார்கள். அது சரஸ்வதி பாயும் சத்தத்தினும் பெரிதாக இருந்தது. அவர்கள் நா தப்பிப் பேசத் தொடங்கினார்கள். அது உலூகத்தின் ஓலம் போலிருந்தது. எங்கே, யார் முன்னே நிற்கிறோம் என்பதை மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கியிருந்தார்கள். குடம் குடமாகச் சோமத்தைக் குடித்துவிட்டு கீழே விழுந்து உருண்டபடி உளறுவோருக்கும் தமக்கும் பேதமற்றுப் போவதை அவர்கள் உணராதவர்களாக இருந்தார்கள். எனக்கு அதையெல்லாம் காணவே விசித்திரமாக இருந்தது.

அதர்வன் என் பூர்வ ஜென்ம வைரி. அவன் நம்பும் ரிதம் எனக்கு இன்னொரு பிறப்பளித்து இப்போது அவனைக் கொன்று கணக்கைத் தீர்த்து வைக்க அனுப்பியிருக்கிறது. சிந்தை அளவிலும் அவனை நான் மதிக்க நியாயமில்லை. செயலளவில் மதித்ததுமில்லை என்பதைக் காட்டிலும் அவன் அதை எதிர்பார்க்கவில்லை என்பதை முக்கியமாகக் கருதினேன். இருவருக்கும் இடையில் அது எந்த விதமான மனத்தடையினையும் அக்கணம் வரை உருவாக்கியிருக்கவில்லை. சாதாரணமாகவே உரையாடினோம். சாதாரணமாகவே பழகினோம். எனக்கு சில சமயங்களில் உணர்ச்சி மிகும். சில சமயங்களில் ஆவேசம் மிகும். சில சமயம் பரவசப்பட்டிருக்கிறேன். பல சமயங்களில் விரக்தியடைந்து விலகிச் சென்றிருக்கிறேன். எல்லா தருணங்களிலும் அவன் ஒரே மாதிரிதான் இருந்தான். அதுவல்ல விஷயம்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் அவன் எதிரில் நான் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதில்லை. ரௌத்திரம் மிகுந்த தருணங்களில்கூட மதிப்புக்குரிய எதிரியாக மட்டுமே அவனை என்னால் கருத முடிந்தது என்பதை எண்ணிப் பார்த்தேன்.

ஆனால் அந்த பிராமணர்கள் அவனை ஒரு புல்லளவும் மதிக்கவில்லை என்பது வியப்பாக இருந்தது. எனக்கு முனி சொன்ன ஒரு விஷயம் அப்போது நினைவுக்கு வந்தது.

‘வித்ருவை ஆள ஒரு ராஜன் இருக்கிறான். ஆனால் அவனை அந்த ரிஷி ஆண்டுகொண்டிருக்கிறான்.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!