Home » சலம் – 87
சலம் நாள்தோறும்

சலம் – 87

87. வெண் சங்கு

நான் அவனைக் கொலை செய்யத்தான் வித்ருவுக்கு வந்தேன். அறிமுகமான உடனே அதனை அவனிடம் சொல்லவும் செய்தேன். என் கையால்தான் தன் மரணம் நிகழுமென்பதை அவன் அறிந்திருந்தான். அதைக் குறிப்பிட்டே அவன் என்னை வரவேற்றான். எங்கள் இருவரிடத்திலும் பொய் இல்லை. பாசாங்கில்லை. ஒளித்து மறைத்து ஒன்றைச் செய்யும் அவசியம் ஏற்படவேயில்லை. கொல்லவிருப்பவனிடத்தும் கொல்லப்படவிருப்பவனிடத்தும் இருந்த வெளிப்படைத்தன்மை, காணும்தோறும் அவனைத் தொழுபவர்களிடம் ஏன் இல்லை என்பது எனக்கு விளங்கவேயில்லை.

அன்றைக்கு அந்த பிராமணர்கள் அதர்வனை நோக்கி வீசிய வசைச் சொற்களை என்னால் மறக்கவே இயலாது. நினைத்துப் பார்க்கவும் கூசச் செய்யும் அளவுக்கு அவை கீழ்த்தரமாக இருந்தன. அவன் ரிஷி என்பதோ, அபூர்வமான பல சக்திகள் கொண்டவன் என்பதோ, பிறக்காது தோன்றியவன் என்பதோ எனக்கு ஒரு பொருட்டே இல்லை. அவன் வாழ்நாளெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கும் வேத மந்திரங்கள் எதையும் நான் அறியமாட்டேன். எனக்கு அதில் ஆர்வமோ, விருப்பமோ இல்லை. அவனது சொல்லுக்கு வித்ருவின் ராஜனே கட்டுப்படுகிறான் என்பது, முதலில் கேள்விப்பட்டபோது வியப்பளித்தது உண்மையே. ஆனால் சில நாள் அவனோடு பேசிப் பழகிய பின்பு அதில் வியக்க ஒன்றுமில்லை என்றுதான் தோன்றியது.

தருமமோ, நீதியோ, நியாயமோ, உண்மையோ, வேறொன்றோ. தான் நம்பும் ஒன்றன்மீது அசைக்க முடியாத பிடிமானத்துடன் இறுதி வரை நிற்கத் தெரிந்தவன் அடையும் நியாயமான உயரம் அது. அவன் சற்றுத் தளர்ந்தாலும் அந்த இடம் அவனுக்கு இல்லாது போகும். இதில் எனக்கு ஐயமேயில்லை. அதர்வனுக்கு மட்டுமல்ல. மனித குலம் மொத்தத்துக்கும் இந்த விதி பொருந்துமென்று தோன்றியது.

ஆனால் வித்ருவின் பிராமணர்கள் அதுநாள் வரை அவன்மீது காட்டி வந்த மரியாதையும் நம்பிக்கையும் முற்றிலும் போலியானதென்று நான் கண்டுகொண்டேன். எல்லாம் தெரிந்த மகரிஷிக்கு அது ஏன் புரியவில்லை என்பதுதான் எனக்கிருந்த வினா. ஆனால் அவன் அதைப் பொருட்படுத்தியவனாகவே தெரியவில்லை.

அன்றைக்கு நான் ஆவேசம் கொண்டு அந்த பிராமணர்களை அடித்துத் தூக்கி எறிந்த பின்பு, அதர்வன் விரைந்து சென்று அவர்கள் ஒவ்வொருவரையும் தூக்கி நிறுத்தி, என் செயலுக்காக அவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!