Home » நாநூறு ஏக்கர் கோயில்
தமிழர் உலகம்

நாநூறு ஏக்கர் கோயில்

அங்கோர்வாட் தமிழ்க் கலைக் கழகம்

2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கம்போடியாவிலிருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டனர். வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாகக் கூறும் போலி தரகர்களை நம்பி முறையற்ற இணைய மோசடி வேலைகளில் சிக்கிக்கொண்ட இந்திய இளைஞர்கள், அங்கிருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியோடு நாடு திரும்பினர்.

சென்ற ஆண்டு முழுவதும், இது போன்று பல குழுக்கள் இந்தியா வந்து சேர்ந்தன. பண்டைய காலத்து இந்தியா – கம்போடியாவின் இடையேயான உறவென்பது இப்போதிருப்பதை போன்று மோசடி விவகாரங்கள் கொண்டதாக இருக்கவில்லை. அது கலை, கலாசார, வணிகப் பரிமாற்றங்களுடன் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்தது. இந்தியாவிலிருந்து சென்ற பிராமண வணிகன் அந்நிலத்தின் நாகர் குல இளவரசியை மணந்து, கம்போடியாவின் முதல் மன்னனாக அமர்ந்தான் என்பது அங்கு இன்றும் தொடரும் நம்பிக்கை.

இன்றைய கம்போடியா, அப்போது கம்புஜ தேசம் என்றறியப்பட்டது. பூர்வகுடிகள் கெமர் மக்கள் என்பதால் அவர்களைக் குறிக்கும் பெயர் கொண்டு சீனா மற்றும் பிற நாட்டுப் பயணிகளால் கம்ப்புசே என்றழைக்கப்பட்டது. பின்னர் அது மேற்கத்தியர்களின் வாயில் நுழையாமல் கம்போடியா என்றானது. அப்பிராந்தியத்தின் ஆதி மொழிகள் மான் மற்றும் கெமர். ஆறாவது நூற்றாண்டுக்குப் பிறகு மான் மக்கள் மெல்ல மெல்ல தாய்லாந்து பக்கம் செல்லத்தொடங்கினர். கெமர் மக்கள் கம்போடியாவிலேயே தங்கினர்.

இரண்டாம் நூற்றாண்டு முதல் சீனாவிலிருந்து கிழக்காசியத் தேசங்கள் வழியாக இந்தியா, ரோமுக்கு அப்போது ஒரு வணிகத் தடம் இருந்தது. பொன், பட்டு, நறுமணச் சமையல் பொருள்கள் என வியாபாரம் செழித்துக் கொண்டிருந்த சமயமது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!