139. பையனா? பொண்ணா?
விமானப் பயணத்தின்போதே, இந்திராதான் அடுத்த பிரதமர் என்பதை முடிவு செய்துவிட்டார் காமராஜ்.
ஆர்.வெங்கட்ராமனிடம், “அந்த அம்மாவுக்குப் பல உலக நாடுகளின் தலைவர்களைத் தெரியும்! அவங்க அப்பாவோட இந்த நாடு முழுக்கவும், இந்தியாவுக்கு வெளியிலயும் நிறைய பயணம் செய்திருக்காங்க! சுதந்திரப் போராட்டத்துல கலந்துக்கிட்ட தலைவர்கள் பலரோடு அவங்களுக்கு நேரடி பரிச்சயம் உண்டு!
அந்த அம்மா புத்திசாலி! ஜாதி, மதம், மாநிலம், மொழி இதுக்கெல்லாம் அவங்க அப்பாற்பட்டவங்க! “
“நீங்க சொல்லறதெல்லாம் சரிதான்! ஆனாலும்…” இழுத்தார் ஆர்.வெங்கடராமன்.
“அந்த அம்மா இருந்தா, 1967 எலெக்ஷன்ல சுலபமா ஜெயிச்சிடலாம்னேன்!” முத்தாய்ப்பாகச் சொன்னார் காமராஜ்.
காமராஜ், இப்படி ஒரு முடிவை திடீரென்று எடுத்துவிடவில்லை.
மீண்டும் பிரதமர் பதவி யாருக்கு? என்ற கேள்விக்கு, “எனக்குத்தான்!” என்று நிச்சயம் மொரார்ஜி தேசாய் சொல்லுவார். ஆனால், அவர் பிரதமர் பதவிக்கு வருவது உசிதமில்லை என்பது ஏற்கனவே முடிவான ஒன்று.
Add Comment