பூசலார் கதை
கம்ப்யூட்டர்களின் மெமரி அதிகரித்துவிட்டது. ஸ்மார்ட்ஃபோனில் கூட 256 ஜீபி சாதாரணமாகிவிட்டது. ஆனால் நமக்குத்தான் எல்லாமே மறந்துபோகிறது. சென்ற தலைமுறை நினைவில் வைத்துக்கொண்ட அளவில் பாதி கூட இப்போது நம்மால் இயல்வதில்லை.
”எத்தனை ஃபோன் நம்பர் உங்களுக்கு ஞாபகத்துல இருக்கு…?” என்று கேட்டுப்பாருங்களேன். அநேகமாக ஒற்றை இலக்க எண்தான் விடையாக வரும்.
என்னதான் கருவிகளில் பதிந்து வைத்துக்கொள்ளலாம் என்றாலும் நம் நினைவில் இருப்பது போல் வருமா?
“ரைட்டுத் தான்… ஆனா மறந்துருதே…”
குட்டிச் சாத்தானை இதற்கும் துணைக்கழைக்கலாம். நிறைய சங்கதிகளை நினைவில் வைத்துக்கொள்ள உதவும் ஓர் உபாயம் தான் “மெமரி பேலஸ்”. நினைவு மாளிகை.
“நல்லாத்தான் படிக்கிறா… ஆனா மறந்துருதுங்கிறாளே…”. உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இந்தப் பிரச்னை இருந்தால் அவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தலாம்.
Add Comment