கொடைக்கானலிலுள்ள பாம்பார் அருவியில் ஒரு பெண் தன்னந்தனியாக ஆட்டம் போடும் விளம்பரம் எண்பதுகளில் மிகப் பரவலாகப் பேசப்பட்டது. நாற்பது வருடங்கள் கடந்தும் இன்று வரை அந்த விளம்பரம் பல பேர் நினைவிலிருந்துவருகிறது. விளம்பரம் என்னவோ லிரில் சோப் பற்றியதுதான். ஆனால் காட்சிப்படுத்தப்பட்ட அருவியும், பெண்ணும், செவியைக் குளிரவைக்கும் இசையும் சேர்ந்து நாமும் அந்த அருவியில் குத்தாட்டம் போடுவதுபோல் ஓர் உணர்வை அளிக்கும். அன்றிலிருந்து, பாம்பார் அருவிக்கு லிரில் அருவி என்ற பெயரும் வழங்கப்பட்டது.
சித்திரம் போல் படிப்படியாகப் பொழியும் நீர்வீழ்ச்சி லிரில் அருவியின் சிறப்பம்சம். அதே போல் ஒரு நீச்சல் குளம் கட்டமைக்கப்பட்டுள்ளது மத்திய அமெரிக்க நாடான கோஸ்ட்டா ரிகாவில்.
உலகப் புகழ் பெற்ற ஹில்டன் ஹோட்டல் நிறுவனத்தில் ஆடம்பரத்துக்காக அமைக்கப்பட்ட தனிக் கிளை நிறுவனம் வால்டார்ப் அஸ்டோரியா ஹோட்டல்கள். இதுவரை பதினைந்து நாடுகளில், முப்பது சொகுசு ஹோட்டல்கள் மட்டுமே இயங்கிவருகின்றன. ஒவ்வொன்றிலும் தனித்துவமான அமைப்பு, ஆளை அசத்தும் சேவைகள், ஆடம்பரமான வசதிகள் உள்ளன. செல்வந்தர்களுக்கு ஏற்ற ஹோட்டல் என்றும் சொல்லலாம். இந்த நிறுவனம் கோஸ்ட்டா ரிகாவில் தனது சொகுசு ஹோட்டலை திறக்கப்போகிறது.
Add Comment