Home » மேலே, உயரே, உச்சியிலே…
இந்தியா

மேலே, உயரே, உச்சியிலே…

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன். இஸ்ரோ தலைவராக இவருக்கு முன்பு சோம்நாத் இருந்தார். கடந்த பதினான்காம் தேதியோடு அவருடைய பதவிக்காலம் முடிவடைந்தது. அதனையடுத்து இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை மத்திய அரசின் நியமனக் குழு நியமித்திருக்கிறது.

இஸ்ரோ தலைவராகப் பதவியேற்கும் முன்பு வி. நாராயணன் திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தின் (எல்பிஎஸ்சி) தலைவராகப் பணியாற்றினார். இஸ்ரோ தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டாவது நபர் வி.நாராயணன். இஸ்ரோ தலைவராகப் பணியாற்றிய முதல் தமிழர் சிவன்.

கன்னியாகுமரி மாவட்டம் மேலக்காட்டுவிளை கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் வி. நாராயணன். இவருடைய தந்தை வன்னியப் பெருமாள். தாய் தங்கம்மாள். இந்தத் தம்பதிக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். எல்லோருக்கும் மூத்தவர் வி. நாராயணன். சிறு வயதிலேயே படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். படிப்பதற்கு அதிக நேரத்தைச் செலவிட்டார். மேலக்காட்டுவிளையில் உள்ள அரசுப் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றார். தொடர்ந்து ஆதிக்காட்டுவிளையில் உள்ள சியோன்புரம் சிஎஸ்ஐ உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தார். பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். பின்னர் கோணம் அரசுத் தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ முடித்தார். டிப்ளமோவிலும் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!