Home » பணம் படைக்கும் கலை – 40
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 40

40. அரை நூற்றாண்டுத் திட்டம்

கல்லூரியில் படிக்கும்போது, நண்பர்கள் சிலர் சேர்ந்து ஒரு சுற்றுலாவுக்குத் திட்டமிட்டோம். அதற்குத் தின்பண்டங்கள் வாங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

மொத்தம் பதினான்கு பேர். ஒவ்வொருவரும் சுமார் 150 கிராம் தின்பண்டங்களை மொசுக்குகிறார்கள் என்று வைத்துக்கொண்டால், 14 × 150 = 2100 கிராம், குத்துமதிப்பாக இரண்டு கிலோ தின்பண்டங்கள் தேவைப்படும்.

நான் இந்தக் கணக்கோடு கடைக்குச் சென்றேன். வெவ்வேறு தின்பண்டங்களைத் தேர்ந்தெடுத்தேன். மொத்தம் இரண்டு கிலோ கணக்கு வந்தவுடன் நிறுத்திவிட்டேன். எல்லாத் தின்பண்டங்களையும் ஒரு பெரிய பையில் போட்டுக் கல்லூரி விடுதிக்குக் கொண்டுவந்துவிட்டேன்.

மறுநாள், திட்டமிட்டபடி சுற்றுலா தொடங்கியது. ஆனால், சில மணிநேரங்களுக்குள் தின்பண்டங்கள் தீர்ந்துவிட்டன. அதனால், எல்லாரும் என்மீது கடுப்பானார்கள், ‘இன்னும் கொஞ்சம் வாங்கியிருக்கலாம்ல?’ என்று உரிமையோடு கடிந்துகொண்டார்கள்.

‘ஆனா, நான் சரியாத் திட்டம் போட்டுத்தான் வாங்கினேன்’ என்றேன் நான்.

‘அது சரி. ஆனா, இப்ப நமக்குச் சாப்பிடறதுக்கு எதுவும் இல்லையே’ என்றான் ஒரு நண்பன், ‘அப்படீன்னா, உன்னோட திட்டம் சொதப்பிடுச்சுன்னுதானே அர்த்தம்?’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!