பூச்சிகளைப் படிக்கும் கலை
‘ஈ’ திரைப்படத்தில், வில்லனை ஓர் ஈ துரத்தித்துரத்திப் பழிவாங்குவதைப் பார்த்திருப்பீர்கள். நிஜ வாழ்க்கையிலும்கூட வில்லன்களுக்கு வில்லன் இந்த ஈ தான். இவற்றுடன் வண்டுகளும் கைகோர்த்துக்கொள்கின்றன. புழு என்பது ஈயின் குழந்தைப்பருவம். புழுக்கள், ஈக்கள், வண்டுகள் போன்றவை பூச்சி ராஜ்ஜியத்தைச் சேர்ந்தவை.
ஒருவர் எப்போது, எங்கு கொல்லப்பட்டார்? இறந்தவர் நஞ்சோ, போதைப்பொருளோ உட்கொண்டிருந்தாரா? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கின்றன இந்தப் பூச்சியினங்கள். பூச்சிகளைப்பற்றிப் படிக்கும் அறிவியலைப் பூச்சியியல் என்போம். ஆங்கிலத்தில் Entomology. இதன் உட்பிரிவு Forensic Entomology. பூச்சிகளைப்பற்றிய அறிவை, தடயவியல் புலனாய்வுக்குப் பயன்படுத்தும் அறிவியல், பூச்சித் தடயவியல் எனப்படுகிறது.
தொண்ணூறுகளின் மத்தியில் நிகழ்ந்த சம்பவம் அது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்டது ஓர் அழுகிய பிணம். இறந்து ஏறத்தாழ இருமாதங்களான ஆணின் உடல். வயது தோராயமாக இருபத்தைந்து இருக்கலாம். நீண்ட தேடுதலுக்குப்பின் ஈரோட்டைச்சேர்ந்த சுந்தரின் சடலமாக அது அடையாளம் காணப்பட்டது. அவர் சென்னையில் தங்கி பணிபுரிந்து கொண்டிருந்தார். காஞ்சிபுரத்திற்கு அலுவலகப் பணியாகச் சென்றவர் அதன்பின் திரும்பியிருக்கவில்லை.
Add Comment