140. பிரதமர் இந்திரா காந்தி
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது.
பாராளுமன்ற மைய மண்டபத்தில் கூடி இருந்த காங்கிரஸ்காரர்களில் ஒருவர் ஆர்வம் பொங்க, “பையனா? பொண்ணா?” என்று கேட்டபோது, அதே பாணியில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவும் பதிலளித்தார்.
“பொண்ணு!”
மொரார்ஜிக்கும், இந்திரா காந்திக்கும் இடையிலான நேரடிப் பதவிப் போட்டியில் ஜெயித்தவர் இந்திரா காந்தி. இந்திரா காந்திக்கு ஆதரவாக 355 வாக்குகளும், மொரார்ஜிக்கு ஆதரவாக 169 வாக்குகளும் விழுந்திருந்தன.
முறைப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், இந்திரா காந்தி மகிழ்ச்சி பொங்க இந்தியில், “என் இதயம் நிறைந்திருக்கிறது” என்றும் “நான் இந்த தேசத்தின் சேவகி” என்றும் நெகிழ்ச்சியோடு சொன்னார்.
Add Comment