Home » இமயத்தைக் குடைந்து இன்பச் சுற்றுலா
சுற்றுலா

இமயத்தைக் குடைந்து இன்பச் சுற்றுலா

காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் உள்ள z மோர்ச் சுரங்கப்பாதையைக் கடந்த ஜனவரி பதிமூன்றாம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது சோன்மார்க் சுரங்கப்பாதை என்றும் அறியப்படுகிறது. ககாங்கிர் மற்றும் சோன்மார்க் இடையே வருடம் முழுவதும் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சுரங்கப்பாதை, ஜோஜிலா சுரங்கப்பாதை திட்டத்தின் ஒரு பகுதி தான். அதன் இன்னொரு பகுதியான பதினைந்து கிலோமீட்டர்கள் நீளம் கொண்ட ஜோஜிலா சுரங்கப்பாதை மற்றும் சில பாலங்கள், சாலைகளின் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

ஸ்ரீநகர் -லே தேசிய நெடுஞ்சாலையில், ஆறரை கிலோமீட்டர் நீளத்திற்கு, 2400 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இந்த சுரங்கப்பாதைக்கான பணிகள், 2015ஆம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கப்பட்டன. 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே பணிகள் நிறைவடைந்து, எளிய முறையில் பாலம் திறந்துவைக்கப்பட்டது. காஷ்மீரில் தேர்தல் நடத்தை முறைகள் அமலில் இருந்ததால், இப்போது அதற்கான திறப்புவிழாவை நடத்தியிருக்கின்றனர்.

ஜம்மு – காஷ்மீர் – லடாக் பகுதிகள் வருடத்தில் ஆறு – ஏழு மாதங்களில் கடும் பனியால் மூடப்பட்டிருக்கும். லடாக்கில் இருக்கும் ராணுவ துருப்புகளுக்கு உணவு, உபகரணங்களை கொண்டு செல்வதில் அப்போது சிரமம் ஏற்படும். அப்பகுதியில் வாழும் பொது மக்களுக்கும் குளிர் காலங்கள் எப்போதுமே சாவலானதுதான். சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்படும்போது, ராணுவ விமானங்களைத்தான் பெரிதும் பயன்படுத்த வேண்டியதாக இருக்கும். இந்தச் சுரங்கப்பாதைகளை வருடம் முழுவதும் பயன்படுத்தலாம் என்பதால், இது பெருமளவில் ராணுவ விமானப் பயன்பாட்டை, பணிப் பளுவைக் குறைக்க உதவும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!