ழ
பேச்சும் ஒரு கலை. சிலர் கருவிலேயே திருவுடையோர். அவர்களுக்கு இக்கலை எளிதாக வசமாகிறது. அவ்வாறல்லாத மற்றவர்கள் முயன்று கற்க வேண்டியுள்ளது.
பேச்சுக் கலையின் முக்கியமானதொரு அங்கம் உச்சரிப்பு. ஒவ்வொரு மொழியும் பிரத்தியேகமான சில ஒலிக்குறிப்புகளைப் பெற்றிருக்கின்றன. தமிழில் “ழ” போல.
தாய்மொழி தவிரப் பிற மொழிகளைப் பேசப் பயிலும்போது பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அவற்றில் ஒரு குறிப்பிட்ட பிரச்னையைத் தீர்ப்பதற்குக் குட்டிச் சாத்தானை வரவழைக்கவிருக்கிறோம்.
”எம்.டி.ஐ” (MTI) கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
Mother Tongue Influence என்னும் மூன்று வார்த்தைகளின் முதலெழுத்துச் சுருக்கம் தான் எம்.டி.ஐ. தாய்மொழித் தாக்கம்.
Add Comment