Home » எனதன்பே, எருமை மாடே – 11
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே, எருமை மாடே – 11

11. சிரித்து வாழ வேண்டும்

பெரும் துன்பங்கள் தினமும் நம்மைத் தாக்குவதில்லை. அப்பப்போ வரும். அவற்றிலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்பதை முந்தைய அத்தியாயத்தில் ஆராய்ந்தோம். ஆனாலும் நமது அன்றாட வாழ்க்கையில் பெருந்துன்பங்கள் தினசரி வராத போதிலும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம்? அல்லது எவ்வளவு சோகமாக இருக்கிறோம்?

எருமை எப்போதாவது சோகமாகவோ அல்லது டென்ஷனாகவோ இருப்பதைக் கண்டிருக்கிறீர்களா? எருமையைப் பொறுத்த வரை தனக்குச் சாப்பிடுவதற்குத் தேவையான புல் கிடைக்கும் வரை வேறெந்தக் கவலையுமில்லை. தனது உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்தாலே தவிர அது சுற்றம் சூழலில் நடப்பவற்றைக் கவலைப்படுவதுமில்லை. இந்த விஷயத்தில் எல்லா மிருகங்களுமே அவற்றின் அடிப்படைத் தேவையான உணவு கிடைக்கும் பட்சத்தில் கவலையற்று வாழ்பவையே. ஆனால் வேட்டையாடி உண்ணும் மிருகங்களாகிய சிங்கம் புலி போன்றவற்றுக்கு உணவு கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அப்படித் தான் வேட்டையாடி உணவை எடுத்தாலும் கழுதைப் புலி போன்ற வேறு மிருகங்கள் அதைத் திருடிக் கொண்டு போகாமல் வேறு காக்க வேண்டும். ஆகவே அவற்றின் வாழ்வு தினசரி டென்ஷனான வாழ்க்கையே.

மனிதர்களாகிய நமக்கு அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டாலும் அது மட்டுமே நமக்குப் போதும் என்கிற மனப்பான்மை பலருக்கு இல்லை. அவர்கள் எருமை போல அல்லாமல் வேட்டையாடும் மிருகங்களைப் போல டென்ஷனாகவே இருப்பார்கள். எப்போதும் மேலும் மேலும் வேண்டும் எனும் உந்துதல் நமக்கு இயற்கையாகவே உள்ளது. அந்த உந்துதல் மனித வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. ஆனாலும் அது முன்னேற்றத்துக்கு மட்டுமே காரணமாக இருக்க வேண்டுமே தவிர அன்றாட வாழ்க்கையில் நமக்கு மன அழுத்தம் தருவதாக இருக்கக் கூடாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்