Home » ஆட்சி மாறலாம்; அவலம் மாறுமா?
உலகம்

ஆட்சி மாறலாம்; அவலம் மாறுமா?

புரட்சி எல்லாம் செய்து இரண்டாவது முறை விடுதலை பெற்ற சிரியாவின் தற்போதைய நிலை என்ன?

சிரியாவில் பத்தில் ஏழு பேருக்கு அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவி தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் மின்சாரம் கிடைப்பதே நிரந்தரமில்லை. வேலை, ஊதியம் இரண்டுமில்லாத மக்களிடம் வேறென்ன வசதிகள் இருக்கும்? நாட்டு மக்களில் தொண்ணூறு சதவீதம் பேர் அகதிகள். இவர்களை மீண்டும் அவரவர் இடங்களுக்குச் செல்ல அனுமதிப்பதும், அங்கு வாழ வழிசெய்து கொடுப்பதுமே சிரியாவின் இன்றைய முதன்மைத் தேவைகள்.

இதைச் செய்ய சிரியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் நிலைப்படுத்துவதும் அவசியமாகிறது. பல்வேறு புரட்சிக் குழுக்களிடையே போருக்குப் பிறகான சமரசங்களை புதிய ஆட்சி ஏற்படுத்த வேண்டுமென்பதும் மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கில் ஜனநாயகம் அவ்வளவு எளிதில் மலர்ந்துவிட முடியுமா என்ற சந்தேகம் நமக்கு மட்டுமல்ல, அங்கிருக்கும் மக்களுக்கும் எழுகிறது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க சிரியாவின் இடைக்காலத் தலைவர் முகமது அல் பஷீர் பல்வேறு தரப்புடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார். முயற்சி வீண் போகவில்லை.

அரசுக் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களின் மேலிருந்த அமெரிக்காவின் தடைகள் அடுத்த ஆறு மாதங்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றன. மனிதாபிமான உதவிகள் சிரியாவுக்குத் தடையின்றி கிடைக்க இது வழிவகுக்கும். அமெரிக்க அண்ணனே வழிவிட்ட பிறகு, ஐரோப்பியத் தம்பிகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலியும் இந்த மாத இறுதிக்குள் தடைகளை விலக்கிக்கொள்வார்கள். இவற்றின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சிரியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, புதிய அதிபருக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள். நிலைமை இதையும் மீறிப்போய்விடக் கூடாதென்ற பயம் உள்ளூர அவர்களுக்கும் இருக்கவே செய்கிறது. இவர்களைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்கும் மற்ற நாடுகளும் இதையேப் பின்பற்றும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்