Home » பணம் படைக்கும் கலை – 41
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 41

41. மூன்று உண்டியல்கள்

ஒரு சிறுவனிடம் மூன்று உண்டியல்கள் இருக்கின்றன.

முதல் உண்டியல் சிறியது. அதில் அவன் தன்னுடைய புதிய மிதிவண்டிக்குப் பணம் சேர்த்துக்கொண்டிருந்தான்.

இரண்டாம் உண்டியல் சற்றுப் பெரியது. அதில் அவன் தன்னுடைய அடுத்த ஆண்டுக்கான இன்பச் சுற்றுலாவுக்குப் பணம் சேர்த்துக்கொண்டிருந்தான்.

மூன்றாம் உண்டியல் இன்னும் பெரியது. அதில் அவன் தன்னுடைய கல்லூரிக் கட்டணத்துக்காகப் பணம் சேர்த்துக்கொண்டிருந்தான்.

இன்றைக்கு, அவனுடைய அத்தை அவனுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்திருக்கிறார். அந்தத் தொகையை அவன் மூன்றாகப் பிரித்து மூன்று உண்டியல்களிலும் போடுகிறான். இதன்மூலம் அவன் தன்னுடைய மூன்று இலக்குகளை நோக்கி இன்னும் சற்று முன்னேறுகிறான்.

ஆனால், இந்த இலக்குகள் மூன்றும் ஒரேமாதிரியானவை இல்லை. அதைக் கவனித்தீர்களா?

மிதிவண்டிக்கான தொகையை அவன் இன்னும் சில மாதங்களில் சேர்த்துவிடுவான். அதனால்தான் அந்த உண்டியல் சிறியதாக இருக்கிறது.

அதோடு ஒப்பிடும்போது, இன்பச் சுற்றுலாவுக்கு இன்னும் கூடுதலான பணம் தேவைப்படுகிறது. அதனால் அவன் நடுத்தர அளவு உண்டியலைப் பயன்படுத்துகிறான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்