Home » சக்கரம் – 2
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 2

2 வேட்கை

சைக்கிள் பயணம் பற்றி வசந்தகுமார் சொன்னதும் எதையுமே யோசிக்காமல் போவதென்று முடிவெடுத்ததற்கு முக்கியக் காரணம், குறைந்தது நான்கு மாதங்களுக்கு ஆபீஸுக்குப் போகவேண்டாம் என்பதாகத்தான் இருக்கவேண்டும் என்று இப்போது எண்ணிப் பார்க்கையில் தோன்றிற்று.

எட்டு மணிநேரம் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடப்பதென்பது பெரிய சித்ரவதை என்கிற, வேலையைத் துறந்தபோது இருந்த மனநிலை, முழுவதுமாகத் தன்னைவிட்டுப் போய்விடவில்லை என்பதில் உள்ளூர சந்தோஷமாக இருந்தது. இதுதான் யதார்த்தம் என்று முற்றிலுமாக சமரசம் செய்துகொண்டுவிட்டோம் என்கிற குற்றவுணர்வு எப்போதாவது எட்டிப் பார்த்துச் சங்கடப்படுத்திக்கொண்டு இருந்தது. இன்னும்கூட லௌகீக வாழ்வில் முழுவதுமாகக் கரைந்து சாதாரணக் குமாஸ்தாவாகத் தான் ஆகிவிடவில்லை என்பதைத் தனக்குத் தானே நிரூபித்துக்கொள்ள இந்தப் பயணம் வாராது வந்த பெரிய வாய்ப்பாகத் தோன்றிற்று.

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள், 24 மணிநேரமும் திறந்தவெளியில்தான் நம் வாழ்வு என்பதே கட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. சோறு கிடைத்துவிடும். எதைப்பற்றிய கவலையுமின்றி ஊரூராய் பார்த்தபடி போய்க்கொண்டிருக்கப்போகிறோம். அதற்குக் கைமாறாய் செய்யவேண்டிய ஒரே காரியம், கோஷம் போடுவது மட்டும்தான். கோஷம் போடுவது அப்படியொன்றும் கௌரவமான விஷயமில்லை என்றாலும் போடுகிற கோஷம் கைமாறு கருதாத நல்ல விஷயத்திற்காகத்தான் என்பதால் அதிலும் பெரிய தவறில்லை. கூட வரும் இந்த மொழி தெரியாத கும்பலுடன் இருந்தாகவேண்டும் என்பது கொஞ்சம் சிக்கல்தான். ஈரோடில் அறைவாசிகளுடன் இருந்ததைப்போல ஒட்டி ஒட்டாமல் இருந்து நான்கு மாதங்களைக் கழித்துவிடவேண்டியதுதான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்