Home » சண்டை முடிந்தது; போர் தொடரும்
உலகம்

சண்டை முடிந்தது; போர் தொடரும்

காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் நல்லபடியாகத் தொடங்கியது. ஞாயிறு அன்று இஸ்ரேல் பணயக் கைதிகள் மூவரை ஹமாஸ் விடுவிக்க, தங்கள் சிறையில் இருந்த தொண்ணூறு பாலஸ்தீனிய பெண்களையும் சிறுவர்களையும் இஸ்ரேல் விடுவித்தது. அக்டோபர் ஏழு தாக்குதலில் கொல்லப்பட்ட யூதர்களுக்குப் பதிலாக நாற்பது மடங்கு பாலஸ்தீனியர்களைப் பதினைந்து மாதங்களாக, இஸ்ரேல் கொன்று குவித்த பிறகு ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் இது.

தற்போது விடுதலையான பாலஸ்தீனியர்கள், விசாரணைக்காக அழைத்து வரப்பட்டு வழக்கேதும் பதியாமல் சிறையில் இருந்தவர்கள். இஸ்ரேல் சட்டம், காரணமோ, வழக்கோ இன்றி பாலஸ்தீனியர்களை காவலில் வைக்க அனுமதிக்கிறது. முதல் கட்டத்தில் முழு போர் நிறுத்தம் 42 நாள்கள் அமலில் இருக்கும். 33 பணயக் கைதிகளை ஹமாஸ் படிப்படியாக விடுவிக்க இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை விடுவிப்பதோடு காஸாவில் இருந்து தங்கள் படைகளை படிப்படியாகப் பின்வாங்கும் என உறுதியளித்துள்ளது. இடம் பெயர்ந்துள்ள லட்சக்கணக்கான காஸா மக்கள் வீடு திரும்பலாம். வீடு எதுவும் அங்கே மிச்சம் இல்லை. தாம் வசித்துவந்த பகுதிகளுக்குத் திரும்பிவரலாம். உணவு, மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் வழங்கக் காத்திருக்கும் லாரிகள் காஸா உள்ளே அனுமதிக்கப்படும்.

முதல் கட்டம் தொடங்கிய பதினாறாம் நாளில் ஒப்பந்தத்தின் அடுத்த இரண்டு கட்டங்கள் நோக்கி நகர்வார்கள். 42 நாள்கள் போர் நிறுத்தமானது, நிரந்தர போர் நிறுத்தமாகும் பேச்சுவார்த்தைகள் நடக்கும். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் கொலைக் குற்றச்சாட்டு இல்லாத பாலஸ்தீனியர்கள் சுமார் 190 பேர் விடுவிக்கப்படுவார்கள். இந்த இரண்டாவது கட்டத்தில் இஸ்ரேல் படைகள் முழுவதும் பின்வாங்கிவிடும். மூன்றாவது கட்டம் காஸாவை புனரமைப்பதும் இறந்துபோன பணயக்கைதிகளின் உடல்களை மீட்பதும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்